PIB Backgrounder
அரசுப் பத்திரங்களில் வெளிநாட்டுப் பங்கேற்பை விரிவுபடுத்துவதற்கான சீர்திருத்தங்கள்
प्रविष्टि तिथि:
06 JUN 2026 1:33PM by PIB Chennai
உலகளாவிய முதலீட்டிற்கான ஒரு முன்னணி இடமாக இந்தியாவின் நிலையை வலுப்படுத்த, அரசு தொடர்ச்சியான சீர்திருத்தங்களை மேற்கொண்டு வருகிறது. மூலதனச் சந்தையை வலுப்படுத்துவதற்காக, அரசுப் பத்திரங்களில் (G-Secs) வெளிநாட்டுப் பங்கு முதலீட்டாளர்களின் பங்கேற்பை அதிகரிக்கும் நோக்கில் தொடர்ச்சியான சீர்திருத்தங்களை அது அறிமுகப்படுத்தியுள்ளது. வட்டி வருமானம், நீண்ட கால மூலதன ஆதாயங்கள், குறுகிய கால மூலதன ஆதாயங்கள் மீதான வரி விலக்குகள், போன்றவை முக்கிய நடவடிக்கைகளில் அடங்கும்.
இந்த சீர்திருத்தங்கள், நிலையான நீண்டகால வெளிநாட்டு மூலதனத்தை ஈர்ப்பது, அரசுப் பத்திரங்கள் சந்தையை வலுப்படுத்துவது, முதலீட்டாளர் தளத்தை விரிவுபடுத்திப் பன்முகப்படுத்துவதன் மூலம் இந்தியாவின் கடன் சந்தையை வலுப்படுத்துவது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளன. அதிக வெளிநாட்டுப் பங்களிப்பானது, உட்கட்டமைப்பு, உற்பத்தி, நகர்ப்புற மேம்பாடு, பருவநிலை முன்முயற்சிகள், பிற தேசிய முன்னுரிமைகளுக்குக் கூடுதல் நிதி ஆதாரத்தை வழங்கும். மேலும் இது, சந்தைத் தன்மையையும் விலை நிர்ணயத்தையும் மேம்படுத்தி, சீரான வளர்ச்சிக்கு ஆதரவளித்து அரசின் கடன் வாங்கும் செலவுகளைக் குறைத்து, நிதிச் சந்தை அளவுகோல்களை வலுப்படுத்தி, பொருளாதாரம் முழுவதும் பணவியல் கொள்கையின் பரவலை மேம்படுத்தும்.
இந்த சீர்திருத்தங்கள், ஓய்வூதிய நிதி, காப்பீட்டு நிதி போன்ற நீண்டகால நிறுவன முதலீட்டாளர்களை ஈர்த்து, நிலையான மூலதன வரவுகளுக்கு வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன், இவை அந்நிய செலாவணி வரவுகளை அதிகரித்து, இந்தியாவின் நிதிச் சந்தைகளின் மீட்சித்திறனை வலுப்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு இது ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2269719®=3&lang=1
(Release ID: 2269719)
****
TV/PLM/SH
(रिलीज़ आईडी: 2269751)
आगंतुक पटल : 12