PIB Backgrounder
azadi ka amrit mahotsav

இந்தியாவின் சுகாதாரத் துறையில் ஏற்பட்டுள்ள மாற்றம்: நம்பிக்கை, கட்டமைப்பு, மக்கள் நல மேம்பாட்டில், 12 ஆண்டுகள்

प्रविष्टि तिथि: 06 JUN 2026 12:29PM by PIB Chennai

கடந்த 12 ஆண்டுகளில், மத்திய அரசு மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக, நாட்டின் சுகாதார அமைப்பு கணிசமான அளவில் வலுவடைந்துள்ளது. 44 கோடிக்கும் அதிகமான குடும்பங்களுக்குக் காப்பீட்டு வசதி அளிக்கப்பட்டுள்ளதுடன், 1.86 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்பாட்டிற்குக் கொண்டுவரப்பட்டுள்ளன. 18,000-க்கும் மேற்பட்ட 'பிரதமரின் மக்கள் மருந்தகங்கள்' மூலம், சந்தை விலையைக் காட்டிலும் 50 முதல் 90 சதவீதம் வரை, குறைவான விலையில் உயிர் காக்கும் மருந்துகள் கிடைக்கின்றன. 47 கோடிக்கும் அதிகமான தொலைபேசி வழி மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை இருமடங்கிற்கும் கூடுதலான எண்ணிக்கையில் அதிகரித்துள்ளது. 2014-ம் ஆண்டு முதல், 12 புதிய எய்ம்ஸ் மருத்துவமனைகள் செயல்பாட்டில் உள்ளன. பாரம்பரிய மருத்துவ சிகுச்சை முறைகள், பொது சுகாதாரக் கட்டமைப்பில் முறையாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. 2014-ம் ஆண்டு முதல், தாய், பச்சிளம்  குழந்தைகளின் இறப்பு விகிதங்கள் கணிசமான அளவில்  குறைந்துள்ளன. காசநோய் பாதிப்பு வெகுவாகக் குறைந்துள்ளதுடன், மலேரியாவால் ஏற்படும் இறப்பு விகிதம் 78 சதவீதம் அளவிற்குக் குறைந்துள்ளது. பல்வேறு வகையான நோய்களின் பாதிப்பும் குறைந்து வருகிறது. ஒட்டுமொத்தமாக, சுகாதாரத் துறையில் ஏற்பட்டுள்ள இத்தகைய முன்னேற்றங்கள், மேம்பட்ட பொதுச் சுகாதாரம், அனைவருக்கும் சுகாதாரப் பாதுகாப்பு ஆகியவை சீரான முறையில் செயல்படுத்தப்பட்டு வருவதைப் பிரதிபலிப்பதாக உள்ளன.

தேசிய புள்ளியியல் அலுவலகம், கடந்த 2025-ம் ஆண்டில்,1.39 லட்சம் குடும்பங்களிடம் நடத்திய ஆய்வின்படி, முன்னெப்போதும் இல்லாத வகையில், அதிக எண்ணிக்கையிலான மக்கள் சுகாதாரச் சேவைகளை நாடுகின்றனர் என்பது தெரிய வந்துள்ளது. அரசு மருத்துவமனைகள், மருந்தகங்களுக்குச் சென்று வெளிநோயாளிகளுக்கானப் பிரிவில், சிகிச்சையைப் (உடல்நல ஆலோசனை, நோய் கண்டறிதல், பரிசோதனைகள், மருந்துச் சீட்டு பெறுதல்) பெறுபவர்கள் எவ்விதக் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படும் உள்நோயாளிகளில், ஏறக்குறைய  பாதி பேர் தங்களது மருத்துவ சிகிச்சைக்காக 1,100 ரூபாய்க்கும் குறைவான தொகையை செலவிடுகின்றனர். மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள குடும்பங்கள், இத்தகைய மையங்களில், மிகக் குறைந்த அல்லது கட்டணமற்ற சுகாதார சேவைகளைப் பெற்றுப் பயனடைகின்றனர். பொது சுகாதார கட்டமைப்பின் மீது, மக்களுக்குப் புதிய நம்பிக்கை ஏற்பட்டுள்ளதை இவை எடுத்துக் காட்டுகின்றன.

மத்திய அரசின் சுகாதாரச் செலவினங்கள், முறையான சுகாதாரக் கட்டமைப்பு மேம்பாடுகள் ஆகியவை, அனைவருக்கும் சுகாதாரப் பாதுகாப்பு என்ற இலக்கை நோக்கிய நாட்டின் முன்னேற்றத்திற்கு உந்து சக்தியாக அமைந்துள்ளன. மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்கள் முதல் சுகாதாரக் கட்டமைப்பு விரிவாக்கம் வரை, கடந்த 12 ஆண்டுகளில், இந்தியா தனது பொது சுகாதாரக் கட்டமைப்பிற்கான அடித்தளத்தை முறையாக மறுசீரமைத்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2269699&reg=3&lang=1

(Release ID: 2269699)

****

TV/SV/SH


(रिलीज़ आईडी: 2269740) आगंतुक पटल : 7
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , हिन्दी , Gujarati