தேசிய மனித உரிமைகள் ஆணையம்
உ.பி. யில் சிறுமி தாக்கப்பட்ட சம்பவம்: தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை
இடுகை இடப்பட்ட நாள்:
05 JUN 2026 5:42PM by PIB Chennai
உத்தரப் பிரதேச மாநிலம் தியோரியா மாவட்டத்தில், திருட்டுச் சந்தேகத்தின் பேரில் பட்டியல் இனத்தை சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர் மரம் ஒன்றில் கட்டி வைக்கப்பட்டு, கொடூரமான முறையில் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து, தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்துள்ளது.
அந்தச் சிறுமியின் தலைமுடியைப் பிடித்து இழுத்து, கிராமம் முழுவதும் ஊர்வலமாக அழைத்துச் சென்று, பின்னர் மரம் ஒன்றில் கட்டி வைத்துத் தாக்கியதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இது கடுமையான மனித உரிமை மீறல் என்று ஆணையம் கருதுகிறது. இது தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு தியோரியா மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2269390®=3&lang=2
செய்தி அடையாள எண்:2269390
****
TV/VK/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2269617)
வருகையாளர் எண்ணிக்கை : 9