சுரங்கங்கள் அமைச்சகம்
உலக சுற்றுச்சூழல் தினம்: மத்திய சுரங்க அமைச்சகம் சார்பில் 'தாயின் பெயரில் ஒரு மரக்கன்று' இயக்கம்
இடுகை இடப்பட்ட நாள்:
05 JUN 2026 5:34PM by PIB Chennai
உலக சுற்றுச்சூழல் தினக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, மத்திய சுரங்க அமைச்சகம் 'தாயின் பெயரில் ஒரு மரக்கன்று' பிரச்சாரத்தின் கீழ் மரக்கன்று நடும் இயக்கத்தை நடத்தியது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நிலையான வளர்ச்சி மீதான அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் வகையில் இந்த நிகழ்வு அமைந்திருந்தது.
புதுதில்லி நேதாஜி நகரில் உள்ள அமைச்சக வளாகத்தில் நடைபெற்ற இந்த இயக்கத்திற்கு மத்திய நிலக்கரி, சுரங்கத்துறை இணையமைச்சர் திரு சதீஷ் சந்திர துபே, சுரங்க அமைச்சகச் செயலாளர் திரு பியூஷ் கோயல் ஆகியோர் தலைமை வகித்து மரக்கன்றுகளை நட்டனர். அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள், ஊழியர்கள் இதில் கலந்துகொண்டு பசுமையான எதிர்காலத்தை உருவாக்க உறுதியேற்றனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2269382®=3&lang=2
****
TV/PD/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2269615)
வருகையாளர் எண்ணிக்கை : 64