PIB Backgrounder
பல்லுயிர் பெருக்கம்: இந்தியாவின் அர்ப்பணிப்பும் சாதனைகளும்
प्रविष्टि तिथि:
05 JUN 2026 10:09AM by PIB Chennai
இந்தியாவின் பல்லுயிர் பெருக்கத்திற்கான நடவடிக்கைகளும், அர்ப்பணிப்பும், சாதனைகளும் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மிக முக்கியப் பங்காற்றி வருவதாக மத்திய சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்ற அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாட்டின் அரிய இயற்கை வளங்களைப் பாதுகாக்கவும், அழியும் நிலையிலுள்ள பல்வேறு அரிய வகை தாவரங்கள், வன உயிரினங்களை மீட்டெடுக்கவும் தேசிய அளவிலான பல்லுயிர் பாதுகாப்புச் செயல்திட்டங்கள் முனுரிமை அடிப்படையில் தீவிரமாகச் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. உலகின் மொத்த நிலப்பரப்பில் இந்தியா மிகச் சிறிய பகுதியை மட்டுமே கொண்டிருந்த போதிலும், உலக அளவில் பதிவு செய்யப்பட்டுள்ள பல்லுயிர் பெருக்கக் கட்டமைப்பில் நம் நாடு ஒரு மிகப்பெரிய இயற்கை பங்களிப்பாளராக திகழ்ந்து வருகிறது. சர்வதேச அளவில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட பல்வேறு பன்னாட்டு உடன்படிக்கைகள், ஒப்பந்தங்களில் இந்தியா கையெழுத்திட்டுத் தனது முழுமையான உலகளாவிய பொறுப்புணர்வையும் கூட்டுப் பங்களிப்பையும் உறுதி செய்துள்ளது. இயற்கை சமநிலையை எவ்வித பாதிப்புமின்றிப் பாதுகாப்பதன் மூலமாக மட்டுமே எதிர்காலச் சந்ததியினரின் பாதுகாப்பான, நிலையான வாழ்வாதாரத்தை உறுதிசெய்ய முடியும் என்பதால், காலச் சூழலுக்கு ஏற்ற புதிய மேம்பட்ட உத்திகள் உள்ளூர் அமைப்புகளுடன் இணைந்து தற்பொழுது மிகச் சிறப்பாக வகுக்கப்பட்டு வருகின்றன.
பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் தொலைநோக்குடன் கூடிய சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சீர்திருத்தங்கள் காரணமாக, நாட்டின் ஒட்டுமொத்த வனப்பகுதிகளின் பரப்பளவும் பசுமைப் பரப்பின் அளவும் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்துள்ளது. இத்தகைய வனப் பாதுகாப்புத் திட்டங்கள் இயற்கை வளங்களை மீட்டெடுப்பதுடன், காடுகளைச் சார்ந்து வாழும் உள்ளூர் கிராமப்புற மக்களுக்குத் தேவையான நிலையான வாழ்வாதாரங்களையும் புதிய வேலைவாய்ப்புகளையும் கணிசமாக விரிவுபடுத்தி அவர்களின் பொருளாதார வளர்ச்சியை உறுதி செய்ய வழிவகுக்கிறது. அதிநவீன டிஜிட்டல் கண்காணிப்புத் தளங்களை தேசிய அளவில் நவீனமயமாக்குவதன் வாயிலாக, வனப்பகுதிகளின் பல்லுயிர் பாதுகாப்பு மேலாண்மையில் மிக உயர்ந்த வெளிப்படைத்தன்மை உறுதிசெய்யப்பட்டுள்ளது. செயற்கைக்கோள் தரவுகள், நிகழ்நேரக் கண்காணிப்பு அமைப்புகள் ஆகியவற்றின் அடிப்படையில் வனங்களின் தற்போதைய பாதுகாப்புக் கட்டமைப்பு, வனவிலங்குகளின் நடமாட்டம் குறித்த விவரங்கள் தற்பொழுது மத்திய கட்டுப்பாட்டு மையங்களுடன் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றன.
பல்லுயிர் பெருக்கம் இந்தியாவின் சுற்றுச்சூழல், பொருளாதார முன்னுரிமைகளுக்கு முக்கிய அடித்தளமாகும். இது உணவுப் பாதுகாப்பு, வாழ்வாதாரம், பருவநிலை சகிப்புத்தன்மை, சுற்றுச்சூழல் சமநிலை ஆகியவற்றை மேம்படுத்துகிறது. இந்தியாவின் காடுகள், ஈரநிலங்கள், மலைகள், கடலோரப் பகுதிகள் பன்முகத்தன்மை கொண்ட உயிரினங்களை ஆதரிக்கின்றன. கடந்த பத்தாண்டுகளில் அறிவியல் பூர்வமான மேலாண்மை, வாழ்விட மீட்பு, சமூகப் பங்கேற்பு கொண்ட ஒருங்கிணைந்த அணுகுமுறையை இந்தியா பின்பற்றி வருகிறது. உயிரியல் பன்முகத்தன்மை சட்டம் 2002, அதன் 2023 திருத்தச் சட்டம் ஆகியவை பல்லுயிர் பாதுகாப்பை வலுப்படுத்தி, உள்ளூர் சமூகங்களுக்கான நியாயமான பலன் பகிர்வை உறுதி செய்கின்றன.
இந்தியாவின் மொத்த காடுகளின் பரப்பளவு 8.27 லட்சம் சதுர கிலோமீட்டராக உயர்ந்துள்ளது. இது நாட்டின் மொத்த புவியியல் பரப்பளவில் 25.17 சதவீதமாகும். மேலும் 1.88 லட்சம் சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாதுகாக்கப்பட்ட இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. புலிகள் திட்டம் போன்ற முக்கிய விலங்கினங்களின் பாதுகாப்புத் திட்டங்களால், புலிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2269147®=3&lang=1
***
SS/PD/SH
(रिलीज़ आईडी: 2269503)
आगंतुक पटल : 9