ஆயுஷ்
azadi ka amrit mahotsav

தேசிய ஆயுர்வேத வித்யாபீடத்தில் உலக சுற்றுச்சூழல் தினக் கொண்டாட்டம்

प्रविष्टि तिथि: 05 JUN 2026 3:50PM by PIB Chennai

புதுதில்லியிலுள்ள தேசிய ஆயுர்வேத வித்யாபீடம், உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் இயக்கம், மரக்கன்றுகள் வழங்கும் திட்டத்தை சிறப்பாக நடத்தியுள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நிலையான நல்வாழ்விற்கான தங்களின் அர்ப்பணிப்பை இதன்மூலம் இந்நிறுவனம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. "இயற்கையால் ஈர்க்கப்பட்டு, பருவநிலைக்காக, நமது எதிர்காலத்திற்காக" என்னும் நடப்பாண்டின்  உலக சுற்றுச்சூழல் தினக் கருப்பொருளுக்கு ஏற்ப இந்த சிறப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

வித்யாபீட வளாகத்தில் நடைபெற்ற இந்த மரக்கன்றுகள் நடும் இயக்கத்தில் பேராசிரியர்கள், உயர் அலுவலர்கள், அலுவலகப் பணியாளர்கள், மாணவர்கள் எனப் பலரும் திரளாகப் பங்கேற்றனர். நாட்டின் பசுமைப் பரப்பை அதிகரிப்பதோடு, பொதுமக்களிடையே சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இதன் முதன்மையான முக்கிய நோக்கமாகும். ஆயுர்வேத மருத்துவத்தின் தனித்துவமான அடிப்படையாகவும், இந்தியாவின் பாரம்பரிய அறிவுச் செல்வமாகவும் விளங்கும் மூலிகைத் தாவரங்களைப் பாதுகாப்பதன் அவசியம் குறித்தும் இந்நிகழ்வில் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2269295&reg=3&lang=1

***

SS/PD/SH


(रिलीज़ आईडी: 2269481) आगंतुक पटल : 9
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , हिन्दी , Bengali