சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
போதைப்பொருள் பயன்பாட்டிற்கு எதிரான இயக்கத்தை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது
प्रविष्टि तिथि:
05 JUN 2026 3:19PM by PIB Chennai
மத்திய சமூக நீதி, அதிகாரமளித்தல் அமைச்சகம் தேசிய போதைப்பொருள் தேவை குறைப்பு திட்டத்தின் கீழ் தடுப்பு, விழிப்புணர்வு, மறுவாழ்வு போன்ற விரிவான நடவடிக்கைகள் மூலம் போதைப்பொருள் பயன்பாட்டிற்கு எதிரான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.
இந்தியாவில் 7 கோடிக்கும் அதிகமான மக்கள் போதைப்பொருள் பழக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதற்கேற்ப, 2020-ல் தொடங்கப்பட்ட ‘போதைப்பொருள் இல்லாத இந்தியா இயக்கம்’ மக்கள் இயக்கமாக மாறி, சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. தற்பொழுது நாடு முழுவதும் 768 போதை ஒழிப்பு மறுவாழ்வு மையங்கள் செயல்படுகின்றன. இதனால் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.
ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர், மணிப்பூரைச் சேர்ந்த பெண் ஆகியோர் இலவச சிகிச்சை, முறையான ஆலோசனைகள் மூலம் மீண்டு வந்து புதிய வாழ்வைத் தொடங்கியுள்ளனர். ‘14446’ கட்டணமில்லா உதவி எண், கைபேசி செயலி ஆகியவை மூலம் சேவைகள் எளிதாக்கப்பட்டுள்ளன. ஆரோக்கியமான, வளமான இந்தியாவை உருவாக்க இந்த போதைப்பொருள் ஒழிப்புக்கான மக்கள் இயக்கத்தில் பொதுமக்கள் அனைவரும் இணைந்து உறுதியேற்குமாறு மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2269282®=3&lang=1
***
SS/PD/SH
(रिलीज़ आईडी: 2269477)
आगंतुक पटल : 15