நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மேற்கு வங்கச் சட்டமன்றத்தை டிஜிட்டல்மயமாக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து!

प्रविष्टि तिथि: 04 JUN 2026 7:27PM by PIB Chennai

மேற்கு வங்கச் சட்டமன்றத்தில் 'தேசிய இ-விதான் செயலி' (என்இவிஏ)  திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான முத்தரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது. மத்திய அமைச்சர்கள் திரு.கிரண் ரிஜிஜு, திரு. அர்ஜுன் ராம் மேக்வால், டாக்டர் எல். முருகன் மற்றும் அம்மாநில சபாநாயகர் திரு. ரதிந்திர போஸ் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்வில், முதலமைச்சர் திரு.சுவேந்து அதிகாரி இணையவழியில் பங்கேற்றார்.

 

சட்டமன்றச் செயல்பாடுகளைப் காகிதமில்லாமலும், வெளிப்படைத்தன்மையுடனும் மாற்றுவதே 'டிஜிட்டல் இந்தியா' திட்டத்தின் கீழ் செயல்படும் இத்திட்டத்தின் நோக்கமாகும். இந்த ஒப்பந்தத்தின் மூலம், 'ஒரே நாடு - ஒரே செயலி' என்ற இலக்கை நோக்கி இத்திட்டத்தில் இணையும் 33-வது மாநிலச் சட்டமன்றமாக மேற்கு வங்கம் உயர்ந்துள்ளது.

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2269037&reg=3&lang=1

செய்தி அடையாள எண்:2269037

****

TV/VK/SH


(रिलीज़ आईडी: 2269113) आगंतुक पटल : 10
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Bengali