பெருநிறுவனங்கள் விவகாரங்கள் அமைச்சகம்
திவால் சீர்திருத்தங்கள் குறித்த தேசிய மாநாடு: பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சகம் ஏற்பாடு
प्रविष्टि तिथि:
04 JUN 2026 7:04PM by PIB Chennai
இந்தியப் பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் 'இந்தியப் பெருநிறுவன விவகாரங்கள் நிறுவனம்' , திவால் தொழில்முறை அமைப்புகளின் சங்கத்துடன் இணைந்து, 2026 ஜூன் 13 அன்று புதுதில்லியில் ஒரு தேசிய மாநாட்டை நடத்தவுள்ளது. 'திவால் மற்றும் நொடித்து போதல் சட்டம், 2016' கொண்டுவரப்பட்டு பத்து ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ்விழாவில், ஐஐசிஏ-வின் முதன்மைப் படிப்பான 'திவால் நிலை முதுகலை திட்டத்தின்' 6-வது தொகுதி மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழாவும் நடைபெறுகிறது. மத்திய பெருநிறுவன விவகாரங்கள் துறை இணையமைச்சர் ஹர்ஷ் மல்ஹோத்ரா முதன்மை விருந்தினராகவும், தேசிய கம்பெனி சட்டங்கள் மேல் முறையீட்டு தீர்ப்பாய தலைவர் நீதிபதி அசோக் பூஷன், தேசிய கம்பெனி சட்டங்கள் தீர்ப்பாய தலைவர் நீதிபதி அனுபிந்தர் சிங் கிரெவால் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் பங்கேற்கின்றனர். இம்மாநாடு இந்தியாவின் திவால் தீர்வு உள்கட்டமைப்பை மேலும் வலுப்படுத்துவது மற்றும் எல்லை கடந்த திவால் சட்டங்கள் குறித்து விவாதிக்கவுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2269023®=3&lang=1
செய்தி அடையாள எண்:2269023
****
TV/VK/SH
(रिलीज़ आईडी: 2269102)
आगंतुक पटल : 6