அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
காப்புரிமை தாக்கல் மற்றும் ஆய்வுக் கட்டுரைகள் எழுதுவதற்கான புதிய இணையதளம் அறிமுகம்
प्रविष्टि तिथि:
04 JUN 2026 5:14PM by PIB Chennai
நாட்டின் ஆராய்ச்சி கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில், காப்புரிமை தாக்கல் மற்றும் ஆய்வுக் கட்டுரைகள் எழுதுவதில் ஆராய்ச்சியாளர்கள், மாணவர்கள் மற்றும் கண்டுபிடிப்பாளர்களுக்குத் தேவையான பயிற்சி உதவிகளை வழங்குவதற்கான புதிய டிஜிட்டல் இணையதளத்தை மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் இன்று அறிவித்தார். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பல்வேறு துறைகளின் கூட்டு ஆய்வுக் கூட்டத்திற்குத் தலைமை வகித்த போது அமைச்சர் இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் பேராசிரியர் அஜய் குமார் சூட் மற்றும் அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளையின் (ஏஎன்ஆர்எஃப்) தலைமைச் செயல் அதிகாரி டாக்டர் ஷிவ்குமார் கல்யாணராமன் உள்ளிட்ட உயரதிகாரிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
ஆராய்ச்சியாளர்கள் மற்றும் இளம் கண்டுபிடிப்பாளர்களின் அறிவியல் எழுத்துத் திறன், அறிவுசார் சொத்துரிமை பாதுகாப்பு மற்றும் காப்புரிமை நடைமுறைகளுக்கான திறன் மேம்பாட்டு தளமாக இந்த புதிய இணையதளம் செயல்படும் என்று அமைச்சர் குறிப்பிட்டார். அறிவியல் துறைகள் தனித்தனிப் பிரிவுகளாகச் செயல்படாமல், ஒருங்கிணைந்து கூட்டு முயற்சியுடன் செயல்பட வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். மேலும், விஞ்ஞானிகளின் நிர்வாகத் திறனை மேம்படுத்தும் வகையில் இந்தத் திட்டங்களை கர்மயோகி திட்டத்துடன் இணைக்கவும், டிஜிட்டல் ஊடகங்கள் மூலம் அறிவியல் துறையின் சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்க்கவும் அவர் அறிவுறுத்தினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2268946®=48&lang=1
****
TV/PD/SH
(रिलीज़ आईडी: 2269090)
आगंतुक पटल : 7