கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
வரும் 2031-ம் ஆண்டிற்குள் மேற்கு வங்காளத்தின் கடல்சார் துறையில் 62,500 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கு மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது: அமைச்சர் திரு சர்பானந்த சோனோவால்
प्रविष्टि तिथि:
04 JUN 2026 6:58PM by PIB Chennai
மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிப்பாதைகள் துறை அமைச்சர் திரு சர்பானந்த சோனோவால், மேற்கு வங்க முதலமைச்சர் திரு சுவேந்து அதிகாரியை கொல்கத்தாவில் சந்தித்துப் பேசினார். அப்போது, வரும் 2031-ம் ஆண்டிற்குள் மேற்கு வங்காளத்தைக் கிழக்கு இந்தியாவின் முதன்மை கடல்சார் மையமாக மாற்றும் நோக்கில், ₹19,209 கோடி மதிப்பிலான முதலீட்டுத் திட்டங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
அமிர்த கால கடல்சார் தொலைநோக்கு பார்வை 2047 திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படவுள்ள இந்தத் திட்டங்கள் மூலம் மாநிலத்தில் 62,500 பேருக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும். சியாமா பிரசாத் முகர்ஜி துறைமுகத்தின் சரக்கு கையாளுதல் திறன் 70.87 மில்லியன் மெட்ரிக் டன்னாக உயர்ந்துள்ள நிலையில், உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து கடந்த பத்தாண்டுகளில் ஐந்து மடங்கு அதிகரித்துள்ளது என அமைச்சர் குறிப்பிட்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2269021®=3&lang=1
****
TV/PD/SH
(रिलीज़ आईडी: 2269085)
आगंतुक पटल : 9