நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கம்போடியாவில் யுபிஐ பணப்பரிவர்த்தனைத் தொடக்கம்: இந்தியர்களுக்குப் புதிய வசதி!

प्रविष्टि तिथि: 03 JUN 2026 7:20PM by PIB Chennai

இந்தியத் தேசிய பணம் செலுத்துதல் கழகத்தின் சர்வதேசப் பிரிவான என்ஐபிஎல் மற்றும் கம்போடியாவின் அக்லிடா வங்கி இணைந்து, அங்கு யுபிஐ பணப்பரிவர்த்தனைத் திட்டத்தைத் தொடங்கியுள்ளன. கம்போடியத் தலைநகர் நோம் பென்னில் நடைபெற்ற இதன் முதற்கட்டத் தொடக்க விழாவில் கம்போடியத் தேசிய வங்கி ஆளுநர் டாக்டர் சீ செரி மற்றும் இந்திய ரிசர்வ் வங்கி உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

 

இத்திட்டத்தின் மூலம் கம்போடியா செல்லும் இந்தியப் பயணிகள் அங்குள்ள 45 லட்சத்திற்கும் அதிகமான வணிக நிறுவனங்களில் தங்களின் யுபிஐ செயலிகள் மூலமாக எளிதாகப் பணம் செலுத்த முடியும். இதனால் ரொக்கப் பணம் கொண்டு செல்லும் சிரமம் குறையும். இரண்டாம் கட்டத்தில், கம்போடியக் குடிமக்களும் இந்தியா வரும்போது தங்களின் உள்ளூர் வங்கிக் கணக்குகள் மூலம் இந்திய யுபிஐ குறியீடுகளைப் பயன்படுத்திப் பணம் செலுத்தும் இருவழி வசதி உருவாக்கப்படும். சிங்கப்பூர், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளைத் தொடர்ந்து யுபிஐ வசதி பெறும் ஒன்பதாவது நாடாகக் கம்போடியா இணைந்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2268591&reg=3&lang=1

செய்தி அடையாள எண்: 2268591

****

TV/VK/SH


(रिलीज़ आईडी: 2268679) आगंतुक पटल : 12
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , हिन्दी , Gujarati , Urdu , Malayalam