அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

புற்றுநோய் சிகிச்சைக்கான அடுத்த தலைமுறை நானோ மருந்துகளின் பயன்பாடு

இடுகை இடப்பட்ட நாள்: 03 JUN 2026 5:50PM by PIB Chennai

புனே நகரைச் சேர்ந்த விஞ்ஞானிகள், மரபணு சார்ந்த மருந்துகளின் செயல்பாடுகளின் தன்மையை வெளியிட்டுள்ளனர். இது மார்பக புற்றுநோய்க்கான மேம்பட்ட சிகிச்சைக்கு உதவிடும். இது அடுத்த தலைமுறை சார்ந்த துல்லியமான நானோ மருந்துக்கான செயல்திறனை எடுத்துக் காட்டுகிறது.

புற்றுநோய் சிகிச்சையில் நானோ மருந்துகளின் முன்னேற்றங்கள்,  நச்சுத்தன்மையைக் குறைக்கும் அதே வேளையில், நோயை உண்டாக்கும் மரபணுக்களை நேரடியாக கட்டுப்படுத்தும் வகையில், துல்லியமாக  செயல்படுகின்றன.

மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் உள்ள தன்னாட்சி அதிகாரம் கொண்ட நிறுவனமான புனேவில் உள்ள அகர்கர் ஆராய்ச்சி நிறுவனத்தின்  விஞ்ஞானிகள், மார்பகப் புற்றுநோய்க்கான இலக்கு சார்ந்த மரபணு சிகிச்சைக்காக வடிவமைக்கப்பட்ட புதுமையான மக்கும் தன்மையுடைய நானோ கேரியர் தளத்தை முன்வைத்துள்ளனர்.

மேம்பட்ட சுகாதார பராமரிப்புப் பொருட்கள், அண்மையில்  வெளியிடப்பட்ட ஆராய்ச்சி, மார்பக புற்றுநோயின் முக்கிய திசுக்களின் இலக்கு சார்ந்த மரபணு செயல்பாடுகளை கட்டுப்படுத்தி, புதிய நுண்ணறிவுகளை வழங்குகிறது. புற்றுநோய்க் கட்டியை உடலின் வேறு பாகங்களுக்குப் பரவ விடாமல் கட்டுப்படுத்தும் வகையில் செயல்படுகிறது. மிகவும் பயனுள்ள மற்றும் பாதுகாப்பான நானோமெடிசின் அடிப்படையிலான சிகிச்சை முறைகளை  உருவாக்குவதற்கான ஒரு நம்பிக்கைக்குரிய உத்தியை வழங்குகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2268513&reg=3&lang=1

(Release ID: 2268513)

****

TV/SV/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2268677) வருகையாளர் எண்ணிக்கை : 75
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi