ஜவுளித்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்தியா - ஓமன் விரிவான பொருளாதாரக் கூட்டு ஒப்பந்தம் அமலுக்கு வந்தது!

இடுகை இடப்பட்ட நாள்: 03 JUN 2026 7:24PM by PIB Chennai

இந்தியா - ஓமன் இடையிலான விரிவான பொருளாதாரக் கூட்டு ஒப்பந்தம் ஜூன் 1 முதல் அமலுக்கு வந்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையின் கீழ், மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் ஓமன் நாட்டின் வர்த்தக அமைச்சர் கைஸ் பின் முகமது அல் யூசெப் ஆகியோர் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

 

இவ்வொப்பந்தத்தின் மூலம் இந்திய ஜவுளி, ஆடை மற்றும் கைவினைப் பொருட்களுக்கு ஓமனில் இருந்த 5 சதவீத வரி முழுமையாக நீக்கப்பட்டு, உடனடி வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் ஓமனின் முக்கிய சந்தையில் இந்தியப் பொருட்களின் ஏற்றுமதி கணிசமாக அதிகரிக்கும். மேலும்,  பொருட்கள் உற்பத்தியாகும் நாடு குறித்த சான்றிதழ் முறை முழுவதும் மின்னணுமயமாக்கல், அறிவுசார் சொத்துரிமை மற்றும் புவிசார் குறியீடு அங்கீகாரம் ஆகியவை இந்த ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. இது இந்திய குறு, சிறு, நடுத்தரத் தொழில்கள் மற்றும் கைவினைஞர்களுக்குப் பெரும் வர்த்தக வாய்ப்புகளை உருவாக்கி, இருதரப்புப் பொருளாதார உறவை வலுப்படுத்தும்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2268595&reg=3&lang=1

செய்தி அடையாள எண்: 2268595

****

TV/VK/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2268674) வருகையாளர் எண்ணிக்கை : 75
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Malayalam