சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கூட்டுத்தொழில் மூலதன நிதி மற்றும் அம்பேத்கர் சமூகப் புத்தாக்க நிறுவனத்தின் மூலம், தொழில்முனைவோரின் வெற்றிகளை எடுத்துரைக்கும் கையேட்டை மத்திய அமைச்சர் திரு வீரேந்திர குமார் வெளியிட்டார்

प्रविष्टि तिथि: 03 JUN 2026 5:11PM by PIB Chennai

மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார், இன்று “ விருப்பத்திலிருந்து சாதனை வரை: தொழில்முனைவோர் மற்றும் புதுமையாளர்களின் வெற்றிக் கதைகள்” என்ற கையேட்டை வெளியிட்டார். ஷெட்யூல்டு வகுப்பினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான கூட்டுத்தொழில் மூலதன நிதி மற்றும் அம்பேத்கர் சமூகப் புத்தாக்க இயக்கம் ஆகியவற்றின் கீழ் வழங்கப்படும் ஆதரவின் மூலம், முன்மாதிரிகளாக உருவெடுத்த தொழில்முனைவோரின் எழுச்சியூட்டும் செயல்பாடுகள் குறித்து இந்த கையேடு எடுத்துரைக்கிறது.

இந்நிகழ்ச்சியில், மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணையமைச்சர் திரு. ராம்தாஸ் அதவாலே, சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் செயலாளர், அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் மற்றும் இந்திய தொழில்துறை நிதிக் கழகத்தின் வென்ச்சர் கேப்பிட்டல் ஃபண்ட்ஸ் லிமிடெட் என்ற நிறுவனத்தின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில் உரையாற்றிய மத்திய அமைச்சர், ஷெட்யூல்டு வகுப்பினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரிடையே தொழில்முனைவு, புத்தாக்கம் மற்றும் தன்னம்பிக்கையை வளர்ப்பதில் மத்திய அரசின் அர்ப்பணிப்பு மிக்க நடவடிக்கையை வலியுறுத்தினார். இந்தக் கையேட்டில் இடம்பெற்றுள்ள வெற்றிக் கதைகள், முன்னேற விரும்பும் சமூகங்களுக்கு வாய்ப்புகளை உருவாக்குவதிலும், அவர்களை வேலை தேடுபவர்களாக இல்லாமல், பணிகளை உருவாக்குபவர்களாக மாற்றுவதிலும், இலக்குடன் கூடிய நிதி மற்றும் நிறுவன ஆதரவின் மாற்றியமைக்கும் தாக்கத்தைப் பிரதிபலிக்கின்றன என்று அவர் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2268451&reg=3&lang=1

(Release ID: 2268451)

****

TV/SV/SH


(रिलीज़ आईडी: 2268656) आगंतुक पटल : 7
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी