இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நவீன விளையாட்டு அறிவியல், ஊக்கமருந்து எதிர்ப்பு ஆராய்ச்சி மற்றும் தடகள வீரர்களின் நலனை மேம்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்

प्रविष्टि तिथि: 03 JUN 2026 4:17PM by PIB Chennai

மத்திய அரசின் தன்னாட்சி பெற்ற அமைப்பான புது தில்லியில் உள்ள தேசிய ஊக்கமருந்து பரிசோதனை ஆய்வகம், இன்று (ஜூன் 3, 2026) ஹரியானா மாநிலம் குருகிராமில் அமைந்துள்ள ஸ்ரீ குரு கோவிந்த் சிங் முந்நூற்றாண்டு பல்கலைக்கழகத்துடன், புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

இந்த உத்திசார் ஒத்துழைப்பு, நவீன விளையாட்டு அறிவியல் கல்வி, ஊக்கமருந்து எதிர்ப்பு ஆராய்ச்சி, இந்தியாவில் 'ஊக்கமருந்து பயன்பாடற்ற விளையாட்டு' என்ற பரந்த நோக்கத்தை முன்னெடுப்பதில் ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக அமைகிறது. இந்த இரு நிறுவனங்களின் மூத்த அதிகாரிகள் முன்னிலையில் கையெழுத்திடப்பட்ட இந்த ஒப்பந்தம், அறிவியல்சார் சிறப்பு, நெறிசார் விளையாட்டு மனப்பான்மை, நாடு முழுவதும் உள்ள விளையாட்டு வீரர்களின் முழுமையான வளர்ச்சிக்கான கூட்டு அர்ப்பணிப்புணர்வை  வலியுறுத்துகிறது.

இந்தக் கூட்டு முயற்சி, மாணவர்கள், ஆசிரியர்களுக்கு மேம்பட்ட பயிற்சிகள், செய்முறைப் பயிற்சிகள், ஆராய்ச்சித் திட்டங்கள், நிபுணர்களின் விரிவுரைகள், அதிநவீன ஆய்வக நடைமுறைகளை அறிந்து கொள்வதற்கான வாய்ப்புகளை வழங்க வகை செய்கிறது. பகுப்பாய்வுப் பரிசோதனை, ஊக்கமருந்து எதிர்ப்பு அறிவியல், தடயவியல் பகுப்பாய்வு, சுகாதாரப் பரிசோதனைத் துறைகள் தொடர்பான கூட்டு ஆராய்ச்சி முயற்சிகள், அறிவுசார் பரிமாற்றத் திட்டங்கள், திறன் மேம்பாட்டுச் செயல்பாடுகளையும் எளிதாக்கும்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2268397&reg=3&lang=1

(Release ID: 2268397)

****

TV/SV/SH


(रिलीज़ आईडी: 2268625) आगंतुक पटल : 6
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी