குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

சுதந்திரப் போராட்ட வீரர் வி வி எஸ் ஐயரின் நினைவு தினத்தில், குடியரசு துணைத் தலைவர் மரியாதை செலுத்தினார்

இடுகை இடப்பட்ட நாள்: 03 JUN 2026 3:01PM by PIB Chennai

சிறந்த சுதந்திரப் போராட்ட வீரரும், அறிஞரும், எழுத்தாளருமான திரு. வி வி எஸ்  ஐயரின் நினைவு தினத்தை முன்னிட்டு, குடியரசு துணைத் தலைவர் மாளிகையில், அவருக்கு குடியரசு துணைத் தலைவர் திரு சி பி  ராதாகிருஷ்ணன் இன்று மரியாதை செலுத்தினார்.

வி வி எஸ்  ஐயர் நாட்டின் சுதந்திரப் போராட்டத்திற்காகத் தமது வாழ்கையை  அர்ப்பணித்துக் கொண்ட துணிச்சல்மிக்க தேசபக்தர் என்று குடியரசு துணைத் தலைவர் குறிப்பிட்டார். மேலும், எழுத்துக்கள், மொழிபெயர்ப்புகள் வாயிலாக, வி வி எஸ்  ஐயர், தமிழ் இலக்கியத்திற்கு நிலையான பங்களிப்புகளை வழங்கியுள்ளார் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

வி வி எஸ்  ஐயரின் துணிச்சல், அறிவுக்கூர்மை, தேசத்தின் மீதான அசைக்க முடியாத அர்ப்பணிப்பு ஆகியவை, தலைமுறை தலைமுறையாகத் தொடர்ந்து பலருக்கும் உத்வேகம் அளித்து வருவதாக குடியரசு துணைத் தலைவர் கூறினார்.

 

***

SS/SV/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2268611) வருகையாளர் எண்ணிக்கை : 67
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Bengali , Malayalam