நிலக்கரி அமைச்சகம்
பரப்பு நிலக்கரி/பழுப்பு நிலக்கரி வாயுவாக்கல் திட்டங்களை ஊக்குவிப்பதற்கான திட்டம் குறித்த விழிப்புணர்வுக் கண்காட்சி
प्रविष्टि तिथि:
28 MAY 2026 4:36PM by PIB Chennai
புதுதில்லியில், பரப்பு நிலக்கரி/பழுப்பு நிலக்கரி வாயுவாக்கல் திட்டங்களை மேம்படுத்துவதற்கான திட்டம் குறித்த ஒரு கண்காட்சியை நிலக்கரி அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிகழ்ச்சியில், நிலக்கரி, சுரங்கத்துறை அமைச்சர் திரு ஜி கிஷன் ரெட்டி முக்கிய விருந்தினராகவும், இணையமைச்சர் திரு சதீஷ் சந்திர துபே சிறப்பு விருந்தினராகவும் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய திரு ஜி கிஷன் ரெட்டி, பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைமையின் கீழ், இந்தியா எதிர்காலத்திற்குத் தயாரான, தன்னிறைவு பெற்ற ,பாதுகாப்பான எரிசக்திச் சூழலை நோக்கி சீராக முன்னேறி வருவதாகவும், நாட்டின் தொழில்துறை, பொருளாதார மாற்றத்தின் முக்கியத் தூணாக நிலக்கரி வாயுவாக்கம் உருவெடுத்துள்ளதாகவும் கூறினார். நிலக்கரி வாயுவாக்கம் என்பது வெறும் ஒரு எரிசக்தி சார்ந்த முயற்சி மட்டுமல்ல, அது இந்தியாவின் இறக்குமதிச் சார்பைக் குறைக்கவும், தூய்மையான நிலக்கரிப் பயன்பாட்டை ஊக்குவிக்கவும், உரங்கள், பெட்ரோலிய வேதிப்பொருட்கள், மெத்தனால், ஹைட்ரஜன், மேம்பட்ட உற்பத்தி உள்ளிட்ட கீழ்நிலைத் தொழில்களில் புதிய வாய்ப்புகளை உருவாக்கவும் உதவும் ஒரு உத்திசார்ந்த தேசியத் திட்டம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
நிலக்கரி வாயுவாக்கத்தை ஊக்குவிப்பதில் அரசின் வலுவான அர்ப்பணிப்பை எடுத்துரைத்த அமைச்சர், நாடு முழுவதும் நிலக்கரி வாயுவாக்கத் திட்டங்களை விரைவுபடுத்துவதற்காக, அரசு ஏற்கனவே ரூ.8,500 கோடி மதிப்பிலான ஊக்கத்தொகை திட்டத்தைத் தொடங்கியுள்ளதாகவும், சமீபத்தில் கூடுதலாக ரூ.37,500 கோடி நிதியுதவித் தொகுப்புக்கு ஒப்புதல் அளித்துள்ளதாகவும் குறிப்பிட்டார். இந்த முயற்சிகள், உரங்கள், மெத்தனால், ஹைட்ரஜன், பெட்ரோலிய வேதிப்பொருட்கள் போன்ற துறைகளில் சுமார் ரூ.2.5 லட்சம் கோடி மதிப்பிலான முதலீடுகளை ஈர்க்கவும், பெரிய அளவிலான நேரடி, மறைமுக வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், வலுவான தொழில்துறை மதிப்புச் சங்கிலியை ஏற்படுத்தவும் உதவும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார் .
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2266248®=3&lang=1
***
SS/BR/KR
(रिलीज़ आईडी: 2268227)
आगंतुक पटल : 45