வடகிழக்குப் பகுதி வளர்ச்சி அமைச்சகம்
அசாம் முகா பட்டுக்காக "சினேஜோரி" திட்டத்தை மத்திய அமைச்சர் ஜோதிராதித்யா எம். சிந்தியா தொடங்கினார்
இடுகை இடப்பட்ட நாள்:
02 JUN 2026 7:05PM by PIB Chennai
மத்திய வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. ஜோதிராதித்யா எம். சிந்தியா, அசாம் மாநில முதல்வருடன் இணைந்து "சினேஜோரி" என்ற விரிவான திட்டத்தை இன்று தொடங்கி வைத்தார். அசாமின் தனித்துவமான முகா பட்டுத் துறையை உலகளவில் போட்டித்தன்மை வாய்ந்த, மதிப்புமிக்க ஆடம்பர ஆடைச் சந்தையாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டு இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மத்திய வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டு அமைச்சகம், அசாம் அரசு மற்றும் மத்திய பட்டு வாரியம் ஆகியவற்றின் கூட்டு முயற்சியுடன் இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
உலகின் ஒரே இயற்கையான தங்க நிறப் பட்டும், இந்தியாவின் முதல் புவிசார் குறியீடு பெற்ற பட்டுமான முகா பட்டு, அசாமில் சுமார் 2.6 லட்சம் நெசவாளர் குடும்பங்களின் வாழ்வாதாரமாக விளங்குகிறது. அடுத்த மூன்று ஆண்டுகளில் இத்திட்டத்திற்காக 396 முதல் 411 கோடி ரூபாய் வரை முதலீடு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் உற்பத்தியாளர்களின் வருவாயை உயர்த்துவதோடு, பட்டு சார்ந்த பண்பாட்டு சுற்றுலாவையும் மேம்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும், 2028-ஆம் ஆண்டிற்குள் ஐந்து நவீன பட்டு நூற்பு ஆலைகளை நிறுவுதல், 30 விவசாய உற்பத்தியாளர் அமைப்புகளை உருவாக்குதல், 5,000 ஹெக்டேர் பரப்பளவில் பட்டுப்புழு வளர்ப்புக்கான தாவரங்களை மறுவடிவமைத்தல் மற்றும் முகா பட்டு ஏற்றுமதியை ஆண்டுக்கு 2,000 கிலோவிற்கும் அதிகமாக உயர்த்துதல் ஆகியவை இத்திட்டத்தின் முக்கிய நோக்கங்களாகும்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2268097®=3&lang=1
Release ID: 2268097
****
TV/EA/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2268185)
வருகையாளர் எண்ணிக்கை : 13