பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்
ஒருங்கிணைந்த பழங்குடியினர் மேம்பாட்டு முகமைகளை வலுப்படுத்துவதற்கான தேசிய மாநாடு ஜூன் 3 அன்று விஞ்ஞான் பவனில் நடைபெறுகிறது
प्रविष्टि तिथि:
02 JUN 2026 6:42PM by PIB Chennai
மத்திய பழங்குடியினர் நல அமைச்சகம், ஒருங்கிணைந்த பழங்குடியினர் மேம்பாட்டு முகமைகள் மற்றும் திட்டங்களை வலுப்படுத்துவதற்கான தேசிய மாநாட்டை 2026 ஜூன் 3 அன்று புதுதில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் நடத்துகிறது.
இம்மாநாட்டில் 26 மாநிலங்கள் மற்றும் 4 யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் மற்றும் நிபுணர்கள் பங்கேற்கவுள்ளனர்.
அரசுச் சேவைகளை புவியியல் ரீதியாகக் கடினமான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு மிக அருகில் கொண்டு சேர்க்கும் நோக்கில், 'மிகத் தொலைவில் உள்ளவருக்கு, முதலில் என்ற செயல்பாட்டுக் கொள்கையின் கீழ் ' ஜன்ஜாதிய கரிமா உத்சவ்' நாடு தழுவிய பிரச்சாரமாக நடத்தப்பட்டு வருகிறது.
2026 மே 18 முதல் 25 வரை நடைபெற்ற மக்கள் பங்களிப்பு இயக்கத்தின் மூலம், நிர்வாக அமைப்புகள் நேரடியாகப் பழங்குடியின கிராமங்களுக்குச் சென்று சேவைகளை வழங்கின.
பிரச்சாரத்தின் மூலம் எட்டப்பட்ட முக்கிய மைல்கற்கள்:
• 57,000-க்கும் மேற்பட்ட மக்கள் தொடர்பு முகாம்கள் மூலம் 90 லட்சத்திற்கும் அதிகமான பழங்குடியின மக்கள் நேரடியாகப் பயனடைந்துள்ளனர்.
• 2.27 லட்சத்திற்கும் அதிகமான ஆதார் சேவை உதவிகள், 1.76 லட்சம் ஆயுஷ்மான் பாரத் சேர்க்கைகள் மற்றும் 1.09 லட்சம் ரேஷன் கார்டு உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
• 98,000-க்கும் அதிகமான சாதிச் சான்றிதழ் உதவிகளும், சுமார் 1.19 லட்சம் அறிவாள் செல் இரத்த சோகை பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மாநாட்டின் தொடக்க விழாவில், பெங்களூரு இந்திய அறிவியல் நிறுவனத்தின் நானோ அறிவியல் மற்றும் பொறியியல் மையத்தில் அமைக்கப்பட்டுள்ள பயிற்சிக் கூடத்தை குடியரசுத் தலைவர் காணொலி வாயிலாகத் திறந்து வைக்கிறார். இது பழங்குடியினமாணவர்களுக்கு செமிகண்டக்டர் தயாரிப்புத் துறையில் மேம்பட்ட பயிற்சியைப் பெற உதவும். மேலும், பிபிசிஎல் ஆதரவுடன் 75 ஏகலவ்யா மாதிரி குடியிருப்புப் பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள விண்வெளி ஆய்வகங்களையும் குடியரசுத் தலைவர் திறந்து வைக்கிறார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2268085®=3&lang=1
Release ID: 2268085
****
TV/EA/SH
(रिलीज़ आईडी: 2268128)
आगंतुक पटल : 15