தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சண்டிகரிலிருந்து பாலம்பூர் வரையிலான நெடுஞ்சாலையில் மொபைல் நெட்வொர்க் தரத்தை ட்ராய் மதிப்பீடு செய்தது

प्रविष्टि तिथि: 02 JUN 2026 1:28PM by PIB Chennai

சண்டிகரிலிருந்து பாலம்பூர் வரையிலான நெடுஞ்சாலையில் மொபைல் நெட்வொர்க் தரத்தை இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (ட்ராய்) மதிப்பீடு செய்தது. இந்த சோதனையின் போது மொபைல் நெட்வொர்க் கிடைக்கும் பகுதிகள், அழைப்பு துண்டிப்பு விகிதம், தரவு பதிவிறக்கம், பதிவேற்றம் ஆகிய முக்கிய சேவைகளின் தரம் குறித்து மதிப்பீடு செய்யப்பட்டது. இது குறித்து நுகர்வோருக்கு தெரியப்படுத்தவும் சேவை வழங்குநர்கள் தங்கள் சேவைகளை மேம்படுத்த ஊக்குவிக்கவும் இந்த சோதனை முடிவுகள் வெளியிடப்படுகின்றன.

அனைத்து சேவை வழங்குநர்களின் சிம் கார்டுகளைப் பயன்படுத்தி 2ஜி, 3ஜி, 4ஜி, 5ஜி நெட்வொர்க்குகளில் நேரடித் தரவு, குரல் அழைப்பு சோதனைகள் நடத்தப்பட்டன. 2026  மார்ச் 10 முதல் மார்ச் 13 வரை தனியாரால் நியமிக்கப்பட்ட முகமை மூலம் இமாச்சலப்பிரதேச உரிம சேவை பகுதியில்  ட்ராய் சோதனை நடத்தியது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்  : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2267875&reg=3&lang=1

***

SS/IR/KPG/SH


(रिलीज़ आईडी: 2268104) आगंतुक पटल : 39
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Punjabi