பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ராம நவமி நாளில் பிரதமர் மக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்

प्रविष्टि तिथि: 26 MAR 2026 12:11PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி, ராம நவமி நன்னாளில் மக்களுக்குத் தமது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். தியாகம், தவம், சுயக்கட்டுப்பாடு ஆகியவற்றால் நிறைந்த புருஷோத்தமரான ராமரின் வாழ்க்கை, ஒவ்வொரு சூழ்நிலையையும் வலிமையுடனும் உறுதியுடனும் எதிர்கொள்ள மக்களுக்குத் தொடர்ந்து உத்வேகம் அளிக்கிறது என்று திரு நரேந்திர மோடி கூறியுள்ளார்.

ஸ்ரீராமரின் நிலையான கொள்கைகளின்  முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ள பிரதமர், இந்த விழுமியங்கள் இந்திய மக்களுக்கு மட்டுமல்லாமல், இனிவரும் காலங்களில் ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கும் ஒரு வழிகாட்டும் சக்தியாகத் திகழும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

"நாடு முழுவதும் உள்ள எனது குடும்ப உறுப்பினர்களுக்கு ராம நவமி நல்வாழ்த்துகள். தியாகம், தவம், நிதானம் நிறைந்த மரியாதை புருஷோத்தமரின் வாழ்க்கை, ஒவ்வொரு சூழ்நிலையையும் முழு வலிமையுடன் எதிர்கொள்ள நமக்கு உத்வேகம் அளிக்கிறது. அவரது கொள்கைகள் இந்தியர்களுக்கும் ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கும் என்றென்றும் வழிகாட்டியாக விளங்கும். ஸ்ரீராமரின் அருளால் அனைவரின் நல்வாழ்வும் உறுதி செய்யப்பட்டு, வளர்ச்சியடைந்த, தன்னிறைவு பெற்ற இந்தியாவுக்கான தீர்மானம் நிறைவேறும் என நான் நம்புகிறேன்."

***

(Release ID: 2245553)

TV/PLM


(रिलीज़ आईडी: 2267849) आगंतुक पटल : 22
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Manipuri , Bengali , Bengali-TR , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam