பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

16-வது பாதுகாப்பு கொள்கை மாநாடு: இந்தியாவும் சிங்கப்பூரும் உத்திசார் உறவுகளை வலுப்படுத்தும் புதிய வழிகளை ஆராய்ந்தன

प्रविष्टि तिथि: 28 MAY 2026 7:56PM by PIB Chennai

2026 மே 28 அன்று சிங்கப்பூரில் நடைபெற்ற 16-வது இந்திய-சிங்கப்பூர் பாதுகாப்புக் கொள்கை மாநாட்டுக்கு பாதுகாப்புச் செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங், சிங்கப்பூர் நாட்டின் நிரந்தரச் செயலாளர் (பாதுகாப்பு) திரு ஜோசப் லியோங் ஆகியோர் தலைமை தாங்கினர். இரு செயலாளர்களும், பாதுகாப்பு செயல்பாடுகளின் முன்னேற்றத்தை ஆய்வு செய்ததுடன், பாதுகாப்பு ஒத்துழைப்பு, ராணுவ ஈடுபாடுகள், பாதுகாப்புத் தொழில் ஒத்துழைப்பு, திறன் மேம்பாடு, பிராந்தியப் பாதுகாப்புப் பிரச்சனைகள் ஆகிய முக்கியத் துறைகள் குறித்து விரிவான கலந்துரையாடல்களை நடத்தினர்.

சைபர் பாதுகாப்பு, செயற்கை நுண்ணறிவு, கடல்சார் பாதுகாப்பு, ஆளில்லா அமைப்புமுறைகள், மேம்பட்ட பாதுகாப்புத் தொழில்நுட்பங்கள் போன்ற சிறப்பு வாய்ந்த, வளர்ந்து வரும் துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்தும் இரு நாடுகளும் விவாதித்தன. மாறிவரும் பிராந்திய மற்றும் உலகளாவிய பாதுகாப்புச் சவால்களை எதிர்கொள்வதற்கு, புதுமையால் உந்தப்பட்ட கூட்டாண்மைகள், வளர்ந்து வரும் துறைகளில் ஆழமான ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை இந்த விவாதங்கள் வலியுறுத்தின. சிங்கப்பூர் ஆயுதப் படைகளின் டிஜிட்டல், புலனாய்வு சேவையின் டிஜிட்டல் செயல்பாட்டு தொழில்நுட்ப மையத்தையும் திரு ராஜேஷ் குமார் சிங் பார்வையிட்டார்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2266391&reg=3&lang=1

***

SS/BR/KR


(रिलीज़ आईडी: 2267809) आगंतुक पटल : 11
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Marathi , English , Urdu , हिन्दी