நிதி அமைச்சகம்
மத்திய அரசின் ஏப்ரல் 2026-க்கான நிதிநிலை அறிக்கை
இடுகை இடப்பட்ட நாள்:
01 JUN 2026 8:25PM by PIB Chennai
மத்திய அரசின் ஏப்ரல் 2026-ஆம் மாதத்திற்கான மாதாந்திர வரவு-செலவு கணக்குகள் தொகுக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. நடப்பு நிதியாண்டின் (2026-27) தொடக்கத்தில், அரசு மொத்தம் ரூ.2,12,679 கோடி வருவாயைப் பெற்றுள்ளது. இது மொத்த பட்ஜெட் மதிப்பீட்டில் 5.8% ஆகும். இதில், நிகர வரி வருவாயாக ரூ.1,78,492 கோடியும், வரி அல்லாத வருவாயாக ₹24,293 கோடியும், கடன் மீட்பு உள்ளிட்ட மூலதன வரவுகளாக ரூ.9,894 கோடியும் அரசுக்குக் கிடைத்துள்ளது.
மாநிலங்களுடனான நிதிப் பகிர்வில், வரிப் பங்காக ரூ.87,779 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. இது கடந்த ஆண்டை விட ரூ.6,044 கோடி அதிகமாகும். அதேநேரம், அரசின் ஒட்டுமொத்தச் செலவினம் ரூ.5,74,892 கோடியாக உள்ளது (இது பட்ஜெட் மதிப்பீட்டில் 10.8% ஆகும்). இதில் வருவாய் கணக்கில் ரூ.3,85,151 கோடியும், மூலதனக் கணக்கில் ரூ.1,89,831 கோடியும் செலவிடப்பட்டுள்ளது. குறிப்பாக, வட்டி செலுத்துதலுக்காக ரூ.1,09,562 கோடியும், மானியங்களுக்காக ரூ.43,633 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நிதி நிர்வாகத்தின் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தும் வகையில், அரசின் வருவாய் மற்றும் செலவினங்கள் குறித்த இந்த விவரங்கள் முறையாக வெளியிடப்பட்டுள்ளன.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2267683®=3&lang=1
***
TV/SE/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2267743)
வருகையாளர் எண்ணிக்கை : 13