பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

இந்தியா-மியான்மர் கூட்டு அறிக்கை: மியான்மர் அதிபரின் முதல் அரசுமுறைப் பயணம்

இடுகை இடப்பட்ட நாள்: 01 JUN 2026 7:16PM by PIB Chennai

இந்தியப் பிரதமர் திரு நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில், மியான்மர் அதிபர் திரு. யூ மின் ஆங் ஹ்லைங் மே 30 முதல் ஜூன் 3 வரை இந்தியாவில் தனது முதல் அரசுமுறைப் பயணத்தை மேற்கொண்டார். அதிபருடன் உயர்மட்ட அமைச்சர்கள் மற்றும் வர்த்தகப் பிரதிநிதிகள் குழுவினர் வந்துள்ளனர்.

ஜூன் 1 அன்று பிரதமர் மோடியும், மியான்மர் அதிபரும் இருதரப்பு, பிராந்திய மற்றும் உலகளாவிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவையும் அதிபர் சந்தித்தார். முன்னதாக, வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோர் அதிபரைச் சந்தித்தனர். மியான்மர் அதிபர் மே 30 அன்று புத்த கயாவில் உள்ள மகாபோதி கோயில் உள்ளிட்ட புனிதத் தலங்களைப் பார்வையிட்டார்.

பிரதமர் மோடி தனது உரையில், இந்தியாவின்அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை’ , ‘கிழக்கு நோக்கிய செயல்பாடு’  மற்றும்பெருங்கடல்கொள்கைகளில் மியான்மர் முக்கியப் பங்கு வகிப்பதாகக் குறிப்பிட்டார். வர்த்தகம், பாதுகாப்பு, எல்லை மேலாண்மை மற்றும் கலாச்சார பரிமாற்றங்களை வலுப்படுத்த இரு தலைவர்களும் உறுதி பூண்டனர். கலாடன் போக்குவரத்துத் திட்டம் மற்றும் இந்தியா-மியான்மர்-தாய்லாந்து நெடுஞ்சாலைப் பணிகளை விரைவுபடுத்துவதன் முக்கியத்துவத்தை இரு தரப்பும் வலியுறுத்தின. மேலும், மியான்மர் மாணவர்களுக்கான மெகாங் கங்கை கல்வி உதவித்தொகை 36-லிருந்து 100-ஆக உயர்த்தப்படுவதாக பிரதமர் அறிவித்தார்.

இரு நாடுகளும் ரூபாய்-கியாட்  வர்த்தக முறையை வலுப்படுத்தவும், விவசாயம், எரிசக்தி மற்றும் சுரங்கத்துறையில் முதலீடுகளை அதிகரிக்கவும் ஒப்புக்கொண்டன. மியான்மரின் இறையாண்மையை இந்தியா உறுதி செய்தது; அதேபோல், தங்கள் நிலப்பரப்பு இந்தியாவின் பாதுகாப்புக்கு எதிராகப் பயன்படுத்தப்படாது என மியான்மர் உறுதியளித்தது. மியான்மரின் அமைதி மற்றும் சமூக-பொருளாதார வளர்ச்சிக்கான இந்திய அரசின் ஆதரவை பிரதமர் மீண்டும் வலியுறுத்தினார்.

மியான்மர் அதிபர் தனது பயணத்தின் ஒரு பகுதியாக மும்பை சென்று ஆளுநர் மற்றும் முதலமைச்சரைச் சந்திக்க உள்ளார். இந்தப் பயணம் இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவையும், நெருக்கமான கூட்டாண்மையையும் மேலும் வலுப்படுத்தியுள்ளது. இந்தியாவிற்குத் தங்களை அழைத்த பிரதமருக்கு மியான்மர் அதிபர் நன்றி தெரிவித்ததுடன், பிரதமரை மியான்மருக்கு வருமாறு அழைப்பு விடுத்தார்

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2267644&reg=3&lang=1

***

TV/SE/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2267734) வருகையாளர் எண்ணிக்கை : 14
இந்த வெளியீட்டை படிக்க: English , Marathi , हिन्दी , Gujarati