தேசிய மனித உரிமைகள் ஆணையம்
புதுதில்லியில் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் முதுகலை மாணவர்களுக்கான 4 வாரக் கோடைகாலப் பயிற்சி முகாம் இன்று தொடங்கியது
இடுகை இடப்பட்ட நாள்:
01 JUN 2026 6:11PM by PIB Chennai
இந்திய தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் சார்பில் முதுகலை மாணவர்களுக்கான நான்கு வாரக் கோடைகாலப் பயிற்சி முகாம் புதுதில்லியில் இன்று (01.06.2026) தொடங்கியது. மனித உரிமைகள் குறித்த விழிப்புணர்வை மாணவர்களிடையே மேம்படுத்துவதே இதன் முக்கிய நோக்கமாகும். 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 40 கல்வி நிறுவனங்களிலிருந்து பெறப்பட்ட 1,668 விண்ணப்பங்களில் இருந்து, பல்வேறு துறைகளைச் சேர்ந்த 100 மாணவர்கள் இத்திட்டத்திற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்..
இம்முகாமைத் தொடங்கி வைத்துப் பேசிய ஆணையத்தின் தலைவர் நீதியரசர் திரு வி ராமசுப்பிரமணியன், உலகளவில் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றின் முக்கியத்துவம் மாறாமல் உள்ளது எனக் குறிப்பிட்டார். மாணவர்கள் மனித உரிமைகள் குறித்த விழிப்புணர்வையும், சமூகப் பொறுப்புணர்வையும் வளர்த்துக்கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தினார். நாட்டின் ஒற்றுமையை வலுப்படுத்துவதில் இளைஞர் சக்தியுடன் அறிவாற்றலும் கைகோர்க்க வேண்டும் என ஆணையத்தின் உறுப்பினர் நீதியரசர் டாக்டர் பித்யுத் ரஞ்சன் சாரங்கி தெரிவித்தார்.
இப்பயிற்சியில் நிபுணர்களுடனான கலந்துரையாடல்கள், காவல் நிலையங்கள் மற்றும் முதியோர் இல்லங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கான கள ஆய்வுகள் இடம்பெறும்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2267618®=3&lang=1
***
TV/PKV/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2267710)
வருகையாளர் எண்ணிக்கை : 9