பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ராணுவ செவிலியர் சேவையின் கூடுதல் தலைமை இயக்குநராக மேஜர் ஜெனரல் ரேச்சல் தாமஸ் பொறுப்பேற்பு

प्रविष्टि तिथि: 01 JUN 2026 5:26PM by PIB Chennai

ராணுவ செவிலியர் சேவையின் கூடுதல் தலைமை இயக்குநராக மேஜர் ஜெனரல் ரேச்சல் தாமஸ் 2026 ஜூன் 01 அன்று பொறுப்பேற்றுக்கொண்டார். நாட்டிற்கு சுமார் நாற்பது ஆண்டுகள் சிறப்பான சேவையாற்றி, 2026 மே 31 அன்று பணி ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் லிசம்மா பி.வி.-யைத் தொடர்ந்து அவர் இந்தப் புதிய பொறுப்பை ஏற்றுள்ளார்.

புனேவில் உள்ள புகழ்பெற்ற ஆயுதப்படை மருத்துவக் கல்லூரியின், செவிலியர் கல்லூரியில் பயின்ற முன்னாள் மாணவியான மேஜர் ஜெனரல் ரேச்சல் தாமஸ், 1988-ஆம் ஆண்டு ஜூன் 1 அன்று ராணுவ செவிலியர் சேவையில் அதிகாரியாகத் தனது பணியைத் தொடங்கினார்.

ஏறக்குறைய நான்கு தசாப்தங்களாகச் சிறப்பான பணி அனுபவத்தைக் கொண்டுள்ள இந்த மூத்த அதிகாரி, ஆயுதப்படை மருத்துவச் சேவைகளின் கீழ் இயங்கும் பல்வேறு முன்னணி ராணுவ மருத்துவமனைகளில் மருத்துவ மற்றும் நிர்வாகப் பொறுப்புகளை வெற்றிகரமாக வகித்துள்ளார். குறிப்பாக, வடக்கு மற்றும் கிழக்கு ராணுவப் பிரிவுகளின் கட்டுப்பாட்டில் செயல்படும் எல்லைப் பகுதி மருத்துவமனைகளிலும் அவர் பல்வேறு முக்கியப் பொறுப்புகளை வகித்து திறம்படச் செயல்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

***

(Release ID: 2267566)

TV/SE/RJ


(रिलीज़ आईडी: 2267646) आगंतुक पटल : 91
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी