இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் வடகிழக்கு மலைப் பல்கலைக்கழக மையத்தில் மத்திய இணையமைச்சர் திருமிகு ரக்ஷா கட்சே ஆய்வு
இடுகை இடப்பட்ட நாள்:
28 MAY 2026 6:03PM by PIB Chennai
மத்திய இளைஞர் விவகாரங்கள், விளையாட்டுத் துறை இணையமைச்சர் திருமிகு. ரக்ஷா கட்சே, ஷில்லாங்கில் உள்ள இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் வடகிழக்கு மலைப் பல்கலைக்கழக மையத்தில் ஆய்வு மேற்கொண்டார். அங்கு அவர் விளையாட்டு மைதானங்களைப் பார்வையிட்டதுடன், உள்கட்டமைப்பு வசதிகள், பயிற்சி முறைகளை மதிப்பாய்வு செய்தார். பயிற்சியாளர்கள், இளம் விளையாட்டு வீரர்களுடன் கலந்துரையாடிய அமைச்சர், அவர்களைத் தொடர்ந்து சிறந்து விளங்க ஊக்குவித்தார்..
வடகிழக்கு மாநிலங்கள் அபரிமிதமான விளையாட்டுத் திறன்களையும், கலாச்சாரத்தையும் கொண்டுள்ளதால், அப்பகுதி வீரர்களை தேசிய, சர்வதேச அளவில் உயர்த்த உள்கட்டமைப்பு, பயிற்சிகளை மேம்படுத்துவது அவசியம் என அமைச்சர் வலியுறுத்தினார். இயற்கை அழகு, அமைதியான சூழல், இனிமையான வானிலை ஆகியவற்றைக் கொண்டுள்ள ஷில்லாங் மையம், முன்னணி வீரர்களுக்கான சிறந்த பயிற்சி மையமாக உருவெடுக்கும் அபரிமிதமான திறன் கொண்டது என்றும் அவர் குறிப்பிட்டார்.
விளையாட்டுகள் உடல் தகுதியை மேம்படுத்துவதோடு, இளைஞர்களிடையே தலைமைத்துவப் பண்புகள், குழுப்பணி, நேர்மறையான சமூக ஈடுபாட்டை வளர்க்கிறது என்றார். இந்த ஆய்வின் போது, இந்திய விளையாட்டு ஆணையத்தின் உதவி இயக்குநர் ரஜினிஷ் மிஸ்ரா, மேகாலயா ஒலிம்பிக் சங்கத்தின் செயல் தலைவர் ஜான் கர்ஷிங், பிற விளையாட்டுத்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2266325®=3&lang=1
***
(Release ID: 2266325)
SS/EA/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2267545)
வருகையாளர் எண்ணிக்கை : 44