எரிசக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய அமைச்சர் திரு மனோகர் லால், திரிபுரா அரசுடன் மின் துறை மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டங்கள் குறித்து ஆய்வு செய்தார்

இடுகை இடப்பட்ட நாள்: 31 MAY 2026 6:56PM by PIB Chennai

மத்திய மின்சாரம் மற்றும் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் திரு. மனோகர் லால், இன்று அகர்தலாவில் திரிபுரா மாநிலத்திற்கான மின் துறை மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டங்கள் தொடர்பான விஷயங்கள் குறித்து ஆய்வு செய்தார்.

இந்தக் கூட்டத்தில் திரிபுரா முதலமைச்சர் திரு. மணிக் சாஹா, திரிபுரா அரசின் மின்சாரத் துறை அமைச்சர் மற்றும் மாநில அரசு, மின்சார அமைச்சகம், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் மற்றும் மின்சாரத் துறை பொதுத்துறை நிறுவனங்களின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

 மாநிலத்தில் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தின் முன்னேற்றத்தை அவர் ஆய்வு செய்து, அதை விரைவாகச் செயல்படுத்த அறிவுறுத்தினார். ஆகஸ்ட் 2026-க்குள் அரசு நுகர்வோரை முன்பணம் செலுத்தும் மீட்டர் முறைக்கு மாற்றுவதாகவும், ஜூலை 2027-க்குள் நிலுவையில் உள்ள ஸ்மார்ட் மீட்டர் பணிகளை முடிப்பதாகவும் மாநிலம் உறுதியளித்தது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2267290&reg=3&lang=1  

***

TV/PKV/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2267331) வருகையாளர் எண்ணிக்கை : 9
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी