பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மேகாலயாவின் உம்ரோயில் பிரகதி பயிற்சி 2026 நிறைவடைந்தது

இடுகை இடப்பட்ட நாள்: 30 MAY 2026 4:21PM by PIB Chennai

மேகாலயாவின் உம்ரோய் ராணுவ தளத்தில் நடத்தப்பட்ட பலதரப்பு பயிற்சி பிரகதி 2026-இன் முதல் பதிப்பு, 72 மணி நேர சரிபார்ப்புப் பயிற்சியுடன் நிறைவடைந்தது. இது, பொதுவான பாதுகாப்பு சவால்களைச் சமாளிப்பதில் பங்கேற்கும் ஆயுதப் படைகளின் ஒருங்கிணைந்த செயல்பாட்டுத்திறன், பரஸ்பர நம்பிக்கை மற்றும் கூட்டுத் தீர்மானத்தை வெளிப்படுத்தியது. இந்த நிகழ்வில்,  13 நட்பு வெளிநாடுகளைச் சேர்ந்த ஆறு துணைத் தளபதிகள் மற்றும் 40-க்கும் மேற்பட்ட மூத்த ராணுவ அதிகாரிகள் கலந்து கொண்டனர். லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத்அனைத்துப் பங்கேற்கும் நாடுகளின் பிரதிநிதிகளை வரவேற்றார்.

இந்தியப் பெருங்கடல் பகுதியின் வளர்ச்சி மற்றும் மாற்றத்திற்கான பிராந்திய ராணுவங்களின் கூட்டாண்மை என்பதைக் குறிக்கும் பிரகதி , இந்தியா, பூட்டான், கம்போடியா, மலேசியா, மாலத்தீவுகள், மியான்மர், நேபாளம், பிலிப்பைன்ஸ், செஷெல்ஸ், இலங்கை, வியட்நாம், இந்தோனேசியா, லாவோஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 400-க்கும் மேற்பட்ட துருப்புக்களை ஒன்றிணைத்தது. இந்தப் பயிற்சி சமத்துவம், நட்பு மற்றும் பரஸ்பர மரியாதை என்ற உணர்வோடு நடத்தப்பட்டது.

இந்தப் பயிற்சி, பகுதி மலைப்பாங்கான மற்றும் காட்டுப் பகுதிகளில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் கவனம் செலுத்தியது. விரிவான பயிற்சிக்குப் பிறகு, விரிவுரைகள், செயல்விளக்கங்கள், பயிற்சிகள் மற்றும் சிறப்புத் திறன்கள் மூலம், பங்கேற்பாளர்கள் 72 மணி நேர சரிபார்ப்புப் பயிற்சியை மேற்கொண்டனர். இது பயிற்சியின் விளைவுகளை ஒருங்கிணைத்து, அடையப்பட்ட செயல்பாட்டு ஒருங்கிணைப்பை வெளிப்படுத்தியது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2266978&reg=3&lang=1

***

TV/PKV/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2267047) வருகையாளர் எண்ணிக்கை : 22
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी