வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

புதுதில்லியில் பவியா திட்டம் குறித்த பயிலரங்கை என்ஐசிடிசி நடத்தியது

இடுகை இடப்பட்ட நாள்: 29 MAY 2026 7:27PM by PIB Chennai

மத்திய தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறையின் (டிபிஐஐடி) ஆதரவுடன், தேசிய தொழில்துறை வழித்தடம் மேம்பாட்டுக் கழகம் (என்ஐசிடிசி), புது தில்லியில் உள்ள வணிகா பவனில் பவியா திட்ட கட்டமைப்பு மற்றும் என்டிஎச் & பிஐஎஸ் சோதனை வசதிகள் குறித்த ஒரு பயிலரங்கத்தை நடத்தியது.

இந்தப் பயிலரங்கிற்கு வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின், தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறையின்  செயலாளர் திரு. அமர் தீப் சிங் பாகியா, மத்திய நுகர்வோர் விவகாரத் துறையின் செயலாளர் திருமதி நிதி கரே ஆகியோர் தலைமை தாங்கினர். 31 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலிருந்து 100-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் இந்த அமர்வில் கலந்து கொண்டனர். இந்தப் பயிலரங்கில் மூத்த அதிகாரிகள், தொழில் மேம்பாட்டுக் கழகங்கள், மாநில சிறப்பு நோக்கு நிறுவனங்கள் , இந்திய தர நிர்ணய அமைவனம், தேசிய சோதனை மையம் மற்றும் பிற பங்குதாரர் முகமைகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

என்ஐசிடிசி-யின் தலைமைச் செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநர் திரு. ரஜத் குமார் சைனி, வலுவான உள்கட்டமைப்பு, தர உத்தரவாத வழிமுறைகள் மற்றும் திறமையான நிறுவன கட்டமைப்புகளின் ஆதரவுடன் முதலீட்டிற்குத் தயாரான தொழில்துறை சூழல் அமைப்புகளை உருவாக்குவதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். உலகத் தரம் வாய்ந்த தொழில்துறை பூங்காக்களை உருவாக்குவதையும், சோதனை மற்றும் சான்றிதழ் உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட முன்முயற்சிகள் நாட்டின் வளர்ச்சிக்கு கணிசமாகப் பங்களிக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2266783&reg=3&lang=1

***

TV/PKV/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2266934) வருகையாளர் எண்ணிக்கை : 6
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी