ஆயுஷ்
“யோகா என்பது நல்லிணக்கம் மற்றும் கூட்டு நல்வாழ்விற்கான ஒரு வலிமையான சக்தி”: மத்திய அமைச்சர் திரு பிரதாப் ராவ் ஜாதவ் பேச்சு
இடுகை இடப்பட்ட நாள்:
29 MAY 2026 6:42PM by PIB Chennai
மஹாராஷ்டிரா, லோனாவாலாவில் உள்ள புகழ்பெற்ற கைவல்யதாம யோகா நிறுவனத்தில், மே 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் 'யோகா திருவிழா 2026' நடைபெறுகிறது. இந்திய யோகா சங்கத்தின் இந்த 6-வது தேசிய மாநாட்டிற்கு ஆயுஷ் அமைச்சகம் ஆதரவு அளித்துள்ளது.
"யோகாவில் பன்முகத்தன்மையைக் கொண்டாடுதல்" என்ற கருப்பொருளில் நடைபெறும் இந்த மாநாடு, யோகா ஆச்சார்யர்கள், ஆராய்ச்சியாளர்கள், கல்வியாளர்கள் மற்றும் இளைஞர்களை ஒன்றிணைத்து, யோகாவின் எதிர்கால வளர்ச்சிக்காக விவாதிக்கிறது. மத்திய அமைச்சர் திரு. பிரதாப் ராவ் ஜாதவ் இதனைத் தொடங்கி வைத்தார்.
பல்வேறு யோக மரபுகளை ஒருங்கிணைத்து, அதன் உண்மைத்தன்மையைப் பேணிக் காப்பதே இந்த மாநாட்டின் நோக்கம். யோகாசனங்கள், பிராணாயாமம் மற்றும் தியானம் குறித்த செயல்முறை விளக்கங்கள் இதில் இடம்பெறுகின்றன.
யோகாவை உலகளாவிய ஆரோக்கியம் மற்றும் தடுப்பு மருத்துவத்தின் முக்கிய தூணாக வலுப்படுத்துவதே இந்த மாநாட்டின் முதன்மை நோக்கமாகும். இது இந்தியா யோகா கலையில் கொண்டுள்ள தலைமைத்துவத்தை உலகிற்கு மீண்டும் ஒருமுறை பறைசாற்றுகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2266747®=3&lang=1
***
TV/VK/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2266925)
வருகையாளர் எண்ணிக்கை : 5