அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

ஜம்மு காஷ்மீரில் லாவெண்டர் திருவிழா மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் ஜூன் 6-ல் தொடங்கி வைக்கிறார்

प्रविष्टि तिथि: 29 MAY 2026 5:10PM by PIB Chennai

ஜம்மு-காஷ்மீரின் பதர்வாஹாவில் உள்ள அரசு கல்லூரியில், ஜூன் 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் நான்காவது லாவெண்டர் திருவிழா நடைபெற உள்ளது. "லாவெண்டர் உலகமயமாதல்"  என்ற கருப்பொருளில் நடைபெறும் இந்த விழாவை மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தொடங்கி வைக்கிறார்.

சிஎஸ்ஐஆர்-ஐஐஐஎம்  ஏற்பாடு செய்துள்ள இந்த நிகழ்வு, ஜம்மு-காஷ்மீரில் 'ஊதா புரட்சி'  ஏற்படுத்திய மாற்றத்தைக் கொண்டாடுகிறது. சிஎஸ்ஐஆர்-அரோமா மிஷன் மூலம், 5,000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் இளம் தொழில்முனைவோருக்கு லாவெண்டர் சாகுபடி குறித்த பயிற்சிகள், தரமான விதைகள் மற்றும் நவீனக் கருவிகள் வழங்கப்பட்டுள்ளன.

தொலைதூர இமயமலைப் பகுதிகளில் உள்ள கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, பதர்வாஹாவை லாவெண்டர் சாகுபடியின் மையமாக மாற்றியதில் இந்தத் திருவிழா முக்கியப் பங்கு வகிக்கிறது. இவ்வாண்டு விஞ்ஞானிகள், தொழில்முனைவோர் மற்றும் மாணவர்கள் எனப் பல தரப்பினரும் இதில் பங்கேற்கின்றனர்.

முன்னதாக, பதர்வாஹாவில் லாவெண்டர் வாங்குபவர்-விற்பனையாளர் சந்திப்பு நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2266657&reg=3&lang=1

***

TV/VK/SE


(रिलीज़ आईडी: 2266798) आगंतुक पटल : 59
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: हिन्दी , English , Urdu