மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
azadi ka amrit mahotsav

இந்தியாவில் சப்ஸ்ட்ரேட் உற்பத்தி தொழில்நுட்பம் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் - மத்திய அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் முன்னிலையில் கையெழுத்து

இடுகை இடப்பட்ட நாள்: 29 MAY 2026 4:24PM by PIB Chennai

மத்திய மின்னணுவியல்தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ்ஒடிசா முதலமைச்சர் திரு மோகன் சரண் மாஜிஇன்டெல் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி லிப்-பு டான்பிற முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில்இந்தியாவிற்கு சப்ஸ்ட்ரேட் எனப்படும் அடிப்படை மூலக்கூறு உற்பத்தித் தொழில்நுட்பத்தைக் கொண்டு வருவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

ஒடிசாவில் மேம்பட்ட பேக்கேஜிங் கண்ணாடி உள்ள மூலப்பொருள் உற்பத்தி ஆலையை நிறுவுவதற்கான கட்டமைப்பு தொடர்பாகஒடிசா அரசுஇன்டெல் கார்ப்பரேஷன்அமெரிக்காவின் 3டிஜிஎஸ் நிறுவனம் ஆகியவற்றுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

நாட்டின் மிகப்பெரிய உயர் தொழில்நுட்ப உற்பத்தி முதலீடுகளில் ஒன்றாக இது விளங்குகிறது. இந்த ஆலை புவனேஸ்வர்-குர்தா பகுதியில் அமையவுள்ளது.

இந்தியாவில் குறைக்கடத்தி (செமிகண்டக்டர்) உற்பத்தியின் முழுமையான சூழல் அமைப்பை மேம்படுத்துவதற்கான அரசின் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்பவே இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது என மத்திய மின்னணுவியல்தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார்.

முன்மொழியப்பட்ட இத்திட்டம்ஐந்து முதல் ஆறு வருட காலத்திற்குள் பல கட்டங்களாகச் செயல்படுத்தப்படும். இது நேரடி உயர் திறன் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதோடுபரந்த உற்பத்தி மற்றும் தொழில்நுட்பச் சூழல் அமைப்பில் குறிப்பிடத்தக்க மறைமுக வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2266614&reg=3&lang=1

***

SS/PLM/SE


(வெளியீட்டு அடையாள எண்: 2266780) வருகையாளர் எண்ணிக்கை : 16
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Odia , Kannada