இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மேகாலயாவில் விளையாட்டு, இளைஞர் நல மேம்பாட்டுத் திட்டங்கள் குறித்து மத்திய இணையமைச்சர் திருமதி ரக்ஷா கட்சே ஆய்வு

இடுகை இடப்பட்ட நாள்: 29 MAY 2026 12:05PM by PIB Chennai

மத்திய இளைஞர் நலன், விளையாட்டுத் துறை இணைமைச்சர் திருமதி ரக்ஷா கட்சே, மேகாலயா மாநில விளையாட்டுத் துறை அமைச்சர் திரு வாயிலாத்மிகி ஷில்லா, உயர் அதிகாரிகளுடன் இணைந்து மாநிலத்தில் தற்பொழுது நடைபெற்று வரும் விளையாட்டு, இளைஞர் மேம்பாட்டுத் திட்டங்கள் குறித்து ஆய்வுக் கூட்டத்தை நடத்தினார். இக்கூட்டத்தில் விளையாட்டு உள்கட்டமைப்புகளை வலுப்படுத்துதல், திறமைகளைக் கண்டறிந்து வளர்த்தல், மத்திய-மாநில அரசுகளின் ஒருங்கிணைந்த செயல்பாடுகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. மேகாலயாவின் மாநில விளையாட்டு கல்வித்தொகை திட்டத்தின் கீழ் தற்பொழுது 900 வீரர்கள் பயனடைந்து வருகின்றனர். முதலமைச்சரின் கால்பந்து இயக்கத்தின் கீழ் 125 மையங்கள் மூலம் 10,000 வீரர்கள் பயிற்சி பெற்று வருவதுடன், மவ்கானு கால்பந்து மைதானம், உம்சாவ்லி விளையாட்டு வளாகம், உம்தமிலுள்ள நீர் விளையாட்டு தளம் ஆகியவற்றின் கட்டுமானப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. இளையோர் மேம்பாட்டுத் திட்டம், மை பாரத் இணையதளம் மூலம் தேசிய அலவிலான விளையாட்டுப் போட்டிளில் தன்னார்வலர்களின் பங்களிப்பை அதிகரிக்கவும் அமைச்சர் அறிவுறுத்தினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2266500&reg=3&lang=1

***

SS/PD


(வெளியீட்டு அடையாள எண்: 2266708) வருகையாளர் எண்ணிக்கை : 9
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी