பிரதமர் அலுவலகம்
நாடு முழுவதும் வெப்பநிலை அதிகரித்து வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மக்களை பிரதமர் வலியுறுத்தியுள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
27 MAY 2026 11:21AM by PIB Chennai
நாட்டின் பல்வேறு பகுதிகளில் அதிகரித்து வரும் வெப்பநிலையை சமாளிக்க, மக்கள் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என பிரதமர் திரு நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.
கடுமையான வானிலை இருக்கும் சமயங்களில், மக்கள் தங்கள் உடலை நீரேற்றத்துடன் வைத்துக்கொள்ளவும், வெளியே செல்லும்போது தண்ணீர் எடுத்துச் செல்லவும், மற்றவர்களுக்குத் தண்ணீர் கொடுத்து உதவவும் வேண்டும் என திரு மோடி வலியுறுத்தியுள்ளார்.
தலைச்சுற்றல், குமட்டல், அதீத சோர்வு போன்ற வெப்பத் தாக்கத்தின் அறிகுறிகள் குறித்து மக்கள் விழிப்புடன் இருக்குமாறு பிரதமர் அறிவுறுத்தியுள்ளார். உடல்நலக்குறைவு, பலவீனம் அல்லது தலைவலியால் அவதிப்படும் எவரையும் உடனடியாக குளிர்ச்சியான, நிழற்பாங்கான இடத்திற்கு அழைத்துச் சென்று, தண்ணீரும் சர்க்கரை நீர் கரைசல் (ஓஆர்எஸ்) கிடைப்பதையும் உறுதிசெய்து உதவுமாறு அவர் மக்களை வலியுறுத்தியுள்ளார்.
கடும் வெப்பத்தின் போது குழந்தைகள், முதியவர்கள், வெளியில் வேலை செய்பவர்கள், குறிப்பாகப் பாதிக்கப்படக்கூடியவர்கள், எச்சரிக்கை அறிகுறிகளைப் புறக்கணிப்பது வெப்பத்தாக்கத்திற்கு வழிவகுக்கும் என்றும் திரு மோடி குறிப்பிட்டுள்ளார்.
இந்த வெப்ப அலையின் போது வயதான பெற்றோர்கள், தாத்தா பாட்டிகள் மற்றும் அன்புக்குரியவர்களைத் தவறாமல் கவனித்து, நீரேற்றத்துடன் இருக்கவும், நண்பகல் நேரங்களில் வெளியே செல்வதைத் தவிர்க்கவும், போதுமான ஓய்வு எடுக்கவும் அவர்களுக்கு நினைவூட்டுமாறும் திரு மோடி மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
கடுமையான வானிலை நிலவும் சமயங்களில் கருணையுடன் நடந்துகொள்ள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய பிரதமர், பறவைகள் மற்றும் விலங்குகளுக்காக வீடுகள், பால்கனிகள், மொட்டை மாடிகள், கடைகள் மற்றும் அலுவலகங்களுக்கு வெளியே தண்ணீர் கிண்ணங்களை வைக்குமாறு மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
(Release ID: 2265715)
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2265715®=3&lang=1
***
TV/SMB/PD
(வெளியீட்டு அடையாள எண்: 2266404)
வருகையாளர் எண்ணிக்கை : 8
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Bengali-TR
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam