தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
'வாகனம் முதல் அனைத்து தகவல் தொடர்பு' அமைப்பிற்கான ஒழுங்குமுறை கட்டமைப்புக் குறித்த ட்ராய்-ன் கலந்தாய்வு அறிக்கையின் மீதான கருத்துகளை பெறுவதற்கான கடைசித் தேதி நீட்டிப்பு
இடுகை இடப்பட்ட நாள்:
27 MAY 2026 6:31PM by PIB Chennai
இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (ட்ராய்), 'வாகனம் முதல் அனைத்து தகவல் தொடர்பு' அமைப்பிற்கான ஒழுங்குமுறை கட்டமைப்புக் குறித்த ஒரு கலந்தாய்வு அறிக்கையை 30.04.2026 அன்று வெளியிட்டிருந்தது. இந்த கலந்தாய்வு அறிக்கையில் எழுப்பப்பட்டுள்ள விவகாரங்கள் குறித்து, சம்பந்தப்பட்ட தரப்பினரிடமிருந்து பெற வேண்டிய எழுத்துப்பூர்வமான கருத்துகளைச் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதி 28.05.2026 என்றும், ஆட்சேபனைகளை சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதி 11.06.2026 என்றும் முன்பு நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
கருத்துகளைச் சமர்ப்பிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டிக்கக் கோரி பல்வேறு தரப்பினரிடமிருந்து வந்துள்ள கோரிக்கைகளைக் கருத்தில் கொண்டு, எழுத்துப்பூர்வமான கருத்துகள் மற்றும் ஆட்சேபனைகளை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி முறையே 04.06.2026 மற்றும் 18.06.2026 வரை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேற்கண்ட கருத்துகள்/ஆட்சேபனைகளை, முன்னுரிமை அடிப்படையில் மின்னணு வடிவில், ட்ராய்-ன் ஆலோசகர் (வலையமைப்புகள், அலைக்கற்றை மற்றும் உரிமம்) திரு. அகிலேஷ் குமார் திரிவேதிக்கு advmn@trai.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம். ஏதேனும் கூடுதல் விளக்கம் அல்லது தகவல்கள் தேவைப்படின், ட்ராய்-ன் ஆலோசகர் (வலையமைப்புகள், அலைக்கற்றை மற்றும் உரிமம்) திரு. அகிலேஷ் குமார் திரிவேதியை +91-11-20907758 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2265979&v=3231232423sdcdvchg®=3&lang=2
***
TV/SV/PD
(வெளியீட்டு அடையாள எண்: 2266250)
வருகையாளர் எண்ணிக்கை : 10