நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

திரிபுராவின் உதய்ப்பூரில் நிதிச் சேவைகள் துறை சார்பில் கடன் விழிப்புணர்வு நிகழ்ச்சி

प्रविष्टि तिथि: 27 MAY 2026 4:03PM by PIB Chennai

திரிபுரா மாநிலம்கோமதி மாவட்டம்உதய்பூரில் நேற்று (26.05.2026), நிதி அமைச்சகத்தின் நிதிச் சேவைகள் துறையின் செயலாளர்      திரு எம் நாகராஜு தலைமையில் ஒரு கடன் விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

கோமதி மாவட்டம்உதய்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியின் போதுபல்வேறு வங்கிகளின் மூலம்  4,577 பயனாளிகளுக்கு ரூ  105.40 கோடி கடன்கள் வழங்கப்பட்டன. நபார்டுசிட்பி வங்கிகள் பல்வேறு திட்டங்களுக்காக ரூ  2 கோடிக்கும் அதிகமான நிதியை ஒதுக்கீடு செய்வதாக அறிவித்தன. மேலும்பள்ளிகள்அங்கன்வாடிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காகவங்கிகள் தங்களின் பெருநிறுவன சமூகப் பொறுப்புணர்வு நடவடிக்கைகளின் கீழ் நிதியுதவிகளை வழங்கின.

இப்பகுதியில் உள்ள குறுசிறுநடுத்தர தொழில் துறையை ஊக்குவிக்கவும்கடன் வாங்குபவர்களுக்கு ஆதரவளிக்கவும் சிட்பி வங்கியின் தொகுப்பு மேம்பாட்டுக் கிளை ஒன்று உதய்பூரில் திறந்து வைக்கப்பட்டது. அதே நேரத்தில்நிதிச் சேவைகள் துறை, 'நிதி உள்ளடக்கம் 2.0' என்ற தொலைநோக்கு ஆவணத்தையும் இந்நிகழ்ச்சியின்போது வெளியிட்டது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2265851&reg=3&lang=1

(Release ID :  2265851) 

***

SS/PLM/SE


(रिलीज़ आईडी: 2266008) आगंतुक पटल : 52
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी