இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கிழக்கு காரோ மலைப்பகுதிகளிலில் மத்திய இணையமைச்சர் திருமதி ரக்‌ஷா கட்சே ஆய்வு மேற்கொண்டார்

இடுகை இடப்பட்ட நாள்: 27 MAY 2026 2:08PM by PIB Chennai

வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டு அமைச்சகத்தின் ‘பூர்வோத்தர் சம்பர்க் சேது’ முன்முயற்சியின் மூலம் வடகிழக்கு பிராந்தியத்துடனான மத்திய அரசின் பிணைப்பு வலுவடைந்து வருவதாக மத்திய இளைஞர் நலன், விளையாட்டுத்துறை இணையமைச்சர் திருமதி ரக்‌ஷா கட்சே தெரிவித்துள்ளார். மேகலாயாவின் கிழக்கு காரோ மலை மாவட்டத்தில் உள்ள வில்லியம்நகரில் இன்று அவர் ஆய்வு மேற்கொண்டார். மத்திய-மாநில அரசுகளின் ஒருங்கிணைப்பை வலுப்படுத்தவும், வடகிழக்கு பகுதிகளில் வளர்ச்சித் திட்டங்களின் செயல்பாடுகளை நேரடியாகக் கண்காணிக்கவும் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

வில்லியம்நகரில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் கால்நடை வளர்ப்பு, மீன்வளம், உள்ளூர் கைவினைப் பொருட்கள், மாவட்டத்தின் உள்கட்டமைப்புத் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து அமைச்சர் விரிவாக ஆய்வு செய்தார். அப்போது பேசிய அவர், இத்திட்டத்தின் மூலம் மத்திய அமைச்சர்கள் இப்பகுதிகளுக்கு தொடர்ந்து வருகை தந்து திட்டங்களின் அமலாக்கத்தை மதிப்பிடுவதோடு, மாவட்ட நிர்வாகங்கள், உள்ளூர் மக்களுடன் நெருக்கமான தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

மேலும் வில்லியம்நகரில் உள்ள விளையாட்டு மைதானங்கள், உள்கட்டமைப்பு வசதிகளைப் பார்வையிட்ட அமைச்சர், விளையாட்டுத் திறமைகளை அடிமட்ட அளவிலிருந்து கண்டறிந்து மேம்படுத்துவது அவசியம் என்றார். இதனைத் தொடர்ந்து, பாரம்பரிய கைவினைப் பொருட்கள், சுயஉதவிக் குழுக்களின் தயாரிப்புகளை அவர் பாராட்டினார். இப்பொருட்களுக்கான சந்தை வாய்ப்புகள் விரிவுபடுத்தப்படும் என்றும் அவர் உறுதியளித்தார். வடகிழக்கு பிராந்தியத்தின் உள்ளடக்கிய வளர்ச்சி, உள்கட்டமைப்பு மேம்பாடு, வாழ்வாதார நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு முழு அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறது என்று மத்திய இணையமைச்சர் திருமதி ரக்‌ஷா கட்சே தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2265777&reg=3&lang=1

 

***

SS/PD/SE


(வெளியீட்டு அடையாள எண்: 2265989) வருகையாளர் எண்ணிக்கை : 14
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Assamese