நிதி அமைச்சகம்
வடகிழக்கு மாநிலங்களின் மண்டல ஊரக வங்கிகளின் செயல்பாடுகள் குறித்து நிதிச் சேவைகள் துறை செயலாளர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்
இடுகை இடப்பட்ட நாள்:
26 MAY 2026 9:34PM by PIB Chennai
திரிபுரா மாநிலம் அகர்தலாவில் நிதிச் சேவைகள் துறை செயலாளரின் தலைமையில் வடகிழக்கு மண்டல ஊரக வங்கிகளின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த 7 மண்டல ஊரக வங்கிகளின் தலைவர்கள், பொதுத்துறை வங்கிகள், நபார்டு வங்கியின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில், வடகிழக்கு பிராந்தியத்தில் ஊரகப் பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் இந்த வங்கிகளின் முக்கியப் பங்கு குறித்து எடுத்துரைக்கப்பட்டது. குறிப்பாக, 2025-26 நிதியாண்டில் லாப உயர்வு, வராக்கடன்கள் குறைப்பு ஆகியவற்றின் மூலம் இந்த வங்கிகள் தங்கள் நிதிச் செயல்பாடுகளைச் சிறப்பாக மேம்படுத்தியுள்ளதற்குப் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மேலும், வரும் நாட்களில் டிஜிட்டல் வங்கிச் சேவைகளை விரிவாக்கம் செய்யவும், வங்கிச் சேவைகள் சென்றடையாத கிராமப்புறங்களில் நிதிச் சேர்க்கையை ஆழப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டது. இதற்குத் தேவையான தொழில்நுட்ப உதவிகளைப் பங்களிப்பு வங்கிகள் வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2265652®=3&lang=1
***
(Release ID: 2265652)
SS/EA/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2265878)
வருகையாளர் எண்ணிக்கை : 7