புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சூரியசக்தி மின்கலங்களுக்கான, உற்பத்தியாளர்களின் அங்கீகரிக்கப்பட்ட பட்டியலுக்கான காலக்கெடு ஜூன் 1-உடன் நிறைவடைகிறது – புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் அறிவிப்பு

இடுகை இடப்பட்ட நாள்: 25 MAY 2026 7:44PM by PIB Chennai

சூரியசக்தி மின்கலங்களுக்கான மாதிரிகள் மற்றும் உற்பத்தியாளர்களின் அங்கீகரிக்கப்பட்ட பட்டியலின் இரண்டாம் கட்ட விதியை அமல்படுத்துவதற்கான காலக்கெடுவை, 2026 ஜூன் 1-ஆம் தேதிக்குப் பிறகு ஒட்டுமொத்தமாக நீட்டிக்கத் தேவையில்லை என்று மத்திய புதிய, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

தற்போதைய விதிமுறைகளின்படி, 2026 ஜூன் 1-ஆம் தேதிக்கு முன் தொடங்கப்படும் நிகர அளவீட்டுத் திட்டங்கள் மற்றும் திறந்த அணுகல் திட்டங்களுக்கு இதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதற்குப் பிறகு தொடங்கப்படும் திட்டங்கள் இந்த விதிமுறைகளைப் பின்பற்றுவது கட்டாயமாகும். மேற்கு ஆசியப் பகுதி நிலவரங்களைக் கருத்தில் கொண்டு, ஒட்டுமொத்தமாகக் கால நீட்டிப்பு வழங்காமல், முதலீடுகளைப் பாதுகாக்கும் நோக்கில் தகுதியான திட்டங்களுக்கு மட்டும் தனித்தனியாக கால அவகாசம் வழங்க மத்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் வகை செய்துள்ளது.

இதன்படி, கட்டுமானப் பணிகள் முடிவடைந்து இன்னும் தொடங்கப்படாத திட்டங்கள் அல்லது நிலம் கையகப்படுத்துதல், நிதியுதவி பெறுதல், சோலார் பேனல்கள் வந்தடைதல் போன்ற பயனுள்ள நடவடிக்கைகளை ஏற்கனவே மேற்கொண்ட திட்டங்களுக்கு ஆவணங்களின் அடிப்படையில் கால நீட்டிப்பு பரிசீலிக்கப்படும். இதற்காக விண்ணப்பிக்க விரும்பும் நிறுவனங்கள், தேசிய சூரியசக்தி நிறுவனத்தின் பிரத்யேக இணையதளம் மூலம் 2026 ஜூன் 30-க்குள் விண்ணப்பிக்கலாம்.

மேலும், பிரதமரின் சூரிய சக்தி இலவச மின்சாரத் திட்டத்தின் கீழ் அரசு மானியத்தைத் தாமாக முன்வந்து கைவிடும் குடியிருப்பு நுகர்வோர், 2027 மார்ச் 31 வரை தற்போதுள்ள வழிகாட்டுதல்களின்படி நிர்வகிக்கப்படுவார்கள் என்றும் அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2265119&reg=3&lang=1

 

***

(Release ID: 2265119)
SS/EA /KR


(வெளியீட்டு அடையாள எண்: 2265850) வருகையாளர் எண்ணிக்கை : 4
இந்த வெளியீட்டை படிக்க: हिन्दी , English , Urdu , Kannada