சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
பிஎம் – அஜய் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான இணையதளம் மற்றும் மொபைல் செயலியை மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் தொடங்கியுள்ளது
இடுகை இடப்பட்ட நாள்:
25 MAY 2026 7:18PM by PIB Chennai
பிரதமரின் பட்டியலின மக்களுக்கான மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் உள்ள ஆதர்ஷ் கிராம் (மாதிரி கிராமம்), திறன் மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்புக்கான நிதியுதவி, மற்றும் கல்வி நிறுவனங்களில் விடுதிகள் அமைத்தல் ஆகிய மூன்று கூறுகளையும் முழுமையாக டிஜிட்டல் மயமாக்குவதற்காக பிஎம் – அஜய் இணையதளம் மற்றும் மொபைல் செயலியை மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் தொடங்கி வைக்கிறார்.
மத்திய இணையமைச்சர் திரு பி எல் வர்மா, சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறைச் செயலாளர் திரு சுதான்ஷ் பந்த் மற்றும் உயர் அதிகாரிகள் முன்னிலையில் இந்நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் இதில் காணொளி வாயிலாகப் பங்கேற்கின்றனர்.
இத்திட்டத்தின் கீழ் 47,000-க்கும் மேற்பட்ட பட்டியலின மக்கள் பெரும்பான்மையாக வாழும் கிராமங்களின் சமூக-பொருளாதார வளர்ச்சி குறித்த விவரங்களும், 40 லட்சத்திற்கும் அதிகமான பயனாளிகளின் விவரங்களும், இந்த இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த மொபைல் செயலி மூலம், கள ஆய்வுக் குழுவினர் இணைய வசதி இல்லாத இடங்களிலும் வீடு வீடாகச் சென்று கணக்கெடுப்பு நடத்த முடியும். மேலும், விடுதிகள் கட்டப்படும் இடங்களிலிருந்தே புவிக்குறியீடு, நேர முத்திரையுடன் கூடிய புகைப்படங்களைப் பதிவேற்றம் செய்து, கட்டுமானப் பணிகளின் முன்னேற்றத்தை அதிகாரிகள் நேரடியாகச் சரிபார்க்கவும் இந்தச் செயலி வழிவகை செய்கிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2265106®=3&lang=1
***
(Release ID: 2265106)
SS/EA/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2265839)
வருகையாளர் எண்ணிக்கை : 6