தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஏப்ரல் 2026 இறுதி நிலவரப்படி தொலைத்தொடர்பு சந்தா தரவுகளின் முக்கிய அம்சங்கள்

இடுகை இடப்பட்ட நாள்: 26 MAY 2026 8:12PM by PIB Chennai

1538 சேவை வழங்குநர்களிடமிருந்து பெறப்பட்ட தகவல்களின்படி, 2026 ஏப்ரல் மாதத்திற்கான பிராட்பேண்ட் சந்தாதாரர்களின் மொத்த எண்ணிக்கை, மார்ச் இறுதியில் பதிவான 1065.88 மில்லியனிலிருந்து ஏப்ரல் இறுதியில் 1073.44 மில்லியனாக, 0.71% என்ற மாதாந்திர வளர்ச்சி விகிதத்தில் அதிகரித்துள்ளது.

கம்பிவழி சந்தாதாரர்களின் எண்ணிக்கை 2026 மார்ச்  இறுதியில் 48.25 மில்லியனிலிருந்து ஏப்ரல் இறுதியில் 48.58 மில்லியனாக அதிகரித்தது. கம்பிவழி சந்தாதாரர் தளத்தின் நிகர அதிகரிப்பு 0.33 மில்லியனாக இருந்தது, இதன் மாதாந்திர வளர்ச்சி விகிதம் 0.68% ஆகும்.

இந்தியாவில் ஒட்டுமொத்த கம்பிவழி தொலைபேசி அடர்த்தி 2026 மார்ச் இறுதியில் 3.38%-லிருந்து ஏப்ரல் இறுதியில் 3.40%-ஆக அதிகரித்தது. ஏப்ரல் இறுதியில், நகர்ப்புற மற்றும் கிராமப்புற கம்பிவழி தொலைபேசி அடர்த்தி முறையே 8.42% மற்றும் 0.57% ஆக இருந்தது. ஏப்ரல் 2026 இறுதியில், மொத்த கம்பிவழி சந்தாதாரர்களில் நகர்ப்புற சந்தாதாரர்கள் மற்றும் கிராமப்புற சந்தாதாரர்களின் பங்கு முறையே 89.23% மற்றும் 10.77% ஆக பதிவானது. பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் மற்றும் ஏபிஎஸ்எஃப்எல் ஆகிய நிறுவனங்கள் இணைந்து ஏப்ரல் மாத இறுதியில்  கம்பிவழி சந்தைப் பங்கில் 18.56%-ஐக் கொண்டிருந்தன.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2265617&reg=3&lang=1  

***

TV/RB/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2265681) வருகையாளர் எண்ணிக்கை : 10
இந்த வெளியீட்டை படிக்க: English