சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
ஷெட்யூல்டு வகுப்பினருக்கான நலத்திட்டங்களின் செயலாக்கத்தை டிஜிட்டல் மயமாக்கி வலுப்படுத்துவதற்கு ஏதுவாக, 'பிஎம்-அஜய்' இணையதளம், 'அஜய்' செயலியை மத்திய அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் தொடங்கி வைத்தார்
இடுகை இடப்பட்ட நாள்:
26 MAY 2026 5:53PM by PIB Chennai
பிரதமரின் ஷெட்யூல்டு வகுப்பினருக்கான மேம்பாட்டுத் திட்டம் (பிஎம்-அஜய்) திட்டத்தை விரைவாகவும், தரமாகவும் செயல்படுத்தும் நோக்கில், இதற்கான இணையதளம் மற்றும் செயலியைமத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் தொடங்கி வைத்தார்.
இத்திட்டம், காகிதப் பயன்பாடற்ற முறையில், முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்பட்ட, நிகழ்நேர அடிப்படையிலான பணி, அமலாக்க நடைமுறைக்கு மாறுவதை இலக்காகக் கொண்டுள்ளது.
மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார், இணையமைச்சர் திரு. பி.எல். வர்மா, செயலாளர் திரு. சுதான்ஷ் பந்த், மத்திய சமூக நீதித் துறையைச் சேர்ந்த மூத்த அதிகாரிகளின் முன்னிலையில், 'பிஎம்-அஜய்' இணையதளம் மற்றும் 'அஜய்' செயலியைத் தொடங்கி வைத்தார். அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த செயலாளர்கள், மூத்த அதிகாரிகள் இணையவழியாக இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
ஷெட்ட்யூல்டு வகுப்பினரின் சமூக-பொருளாதார மேம்பாட்டை இலக்காகக் கொண்டு, இத்திட்டத்தின் கீழ், பல்வேறு நலத்திட்டங்களை, சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டம் சார்ந்த சேவைகளை அலைபேசி வாயிலாக பெறுவதற்கும், கிராமப்புற அளவில் திட்டமிடல், செயலாக்கத்தை இறுதி நிலை வரை உறுதி செய்வதற்கும், கள அளவிலான கண்காணிப்பை மேம்படுத்துவதற்கும், நிகழ்நேர அறிக்கையிடலை எளிதாக்குவதற்கும், வெளிப்படைத்தன்மை, டிஜிட்டல் நிர்வாகத்தை வலுப்படுத்துவதற்கும் இந்த செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2265530®=3&lang=1
***
TV/SV/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2265614)
வருகையாளர் எண்ணிக்கை : 14