தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்தியா – ஜப்பான இடையே பணியாளர் ஒத்துழைப்பு குறித்த கருத்தரங்கம் டோக்கியோவில் நடைபெற்றது

இடுகை இடப்பட்ட நாள்: 26 MAY 2026 12:28PM by PIB Chennai

இந்தியா – ஜப்பான இடையே பணியாளர் ஒத்துழைப்பு குறித்த கூட்டுக் கருத்தரங்கம் டோக்கியோவில் 2026 மே 25 அன்று நடைபெற்றது

ஜப்பானில் இந்திய தூதரகமும், ஆசியான் ஒன் கோ நிறுவனமும், இந்தக் கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்திருந்தது. இதில் மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை செயலாளர் திருமிகு வந்தனா குர்நானி முக்கிய உரையாற்றினார்.

இக்கருத்தரங்கில் ஜப்பான் நாட்டு கொள்கை வகுப்பாளர்கள், தொழில்துறை தலைவர்கள், கல்வி நிறுவனங்கள், பணியாளர் துறையைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு இந்தியா – ஜப்பான் இடையே திறன்மிக்க பணியாளர் தொகுப்பு, மனிதவள மேம்பாடு, ஆகியவற்றில் நீண்ட கால ஒத்துழைப்புக் குறித்து விவாதித்தனர்.

கருத்தரங்கில் உரையாற்றிய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை செயலாளர், உலகின் நம்பத்தகுந்த பணியாளர் தொகுப்பு கூட்டாளியாக இந்தியாவின் வளர்ந்து வரும் பங்களிப்புக் குறித்து எடுத்துரைத்தார்.  வெளிப்படையான நெறிமுறையுடன் கூடிய சர்வதேச தொழிலாளர்  தொகுப்பை உருவாக்குவதில்  இந்தியாவின் உறுதிப்பாட்டை சுட்டிக்காட்டினார்.  மக்கள் தொகை வலுவான திறன் மேம்பாட்டுச் சூழல், நிறுவன சீர்திருத்தங்கள் ஆகியவை மூலம் ஜப்பான் உள்ளிட்ட உலகளாவிய பொருளாதார நாடுகளுக்கான திறன்மிக்க மனித வளத்தின் ஆதாரமாக இந்தியா திகழ்கிறது என்று தெரிவித்தார்.

உயர்கல்வி நிறுவனங்கள், தொழிற்பயிற்சி நிறுவனங்கள், தொழில் பழகுநர் முறைகள், டிஜிட்டல் திறன் மேம்பாட்டு தளங்கள், வேலைவாய்ப்பு வழிகாட்டி சேவைகள் ஆகியவற்றின் ஆதரவோடு இந்தியாவின்  பெரிய அளவிலான  பணியாளர் தொகுப்பு தயார் நிலை குறித்து அவர் எடுத்துரைத்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2265303&reg=3&lang=1

 

***

(Release ID: 2265303)

SS/IR/KPG/KR


(வெளியீட்டு அடையாள எண்: 2265524) வருகையாளர் எண்ணிக்கை : 7
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Telugu