விவசாயத்துறை அமைச்சகம்
மத்திய அமைச்சர் திரு சிவராஜ் சிங் சவுகானின் 'அப்னாபன்' புத்தகம் மே 26 அன்று வெளியிடப்படுகிறது
இடுகை இடப்பட்ட நாள்:
25 MAY 2026 8:20PM by PIB Chennai
மத்திய வேளாண்மை, விவசாயிகள் நலன் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் திரு சிவராஜ் சிங் சவுகான் எழுதிய 'அப்னாபன்' என்ற புத்தகம், நாளை (26.05.2026) புதுதில்லியின், பூசாவில் உள்ள பாரத ரத்னா சி. சுப்பிரமணியம் அரங்கத்தில் வெளியிடப்பட உள்ளது.
முன்னாள் பிரதமர் திரு ஹெச். டி. தேவேகவுடா முன்னிலையில், முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர் திரு எம். வெங்கையா நாயுடு இந்த நூலை வெளியிடுவார். இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள், மாநில ஆளுநர்கள், முதலமைச்சர்கள், சமூகத் தலைவர்கள், தலைசிறந்த எழுத்தாளர்கள் மற்றும் மூத்த பத்திரிகையாளர்கள் கலந்துகொள்வார்கள்.
'அப்னாபன்' என்பது, பிரதமர் திரு நரேந்திர மோடியுடனான நீண்டகால தொடர்பிலிருந்து திரு சிவராஜ் சிங் சவுகானுக்குக் கிடைத்த அனுபவங்கள், கற்றல்கள் மற்றும் அவதானிப்புகளைப் பதிவுசெய்யும் ஒரு ஆழ்ந்த தனிப்பட்ட மற்றும் எழுச்சியூட்டும் படைப்பாகும்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2265151®=3&lang=1
***
TV/RB/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2265243)
வருகையாளர் எண்ணிக்கை : 12