தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
அஞ்சல் துறையின் வருவாய் கடந்த நிதியாண்டில் ரூ.15,373 கோடியாக உயர்வு: மத்திய இணையமைச்சர் திரு சந்திரசேகர் பெம்மசானி தகவல்
இடுகை இடப்பட்ட நாள்:
25 MAY 2026 7:16PM by PIB Chennai
இந்திய அஞ்சல் துறையின் மொத்த வருவாய் கடந்த நிதியாண்டில் ரூ.15,373 கோடியாக உயர்ந்துள்ளதாக மத்திய தகவல் தொடர்பு மற்றும் ஊரக வளர்ச்சித்துறை இணையமைச்சர் டாக்டர் சந்திரசேகர் பெம்மசானி தெரிவித்துள்ளார். இத்துறையின் 170 ஆண்டு கால வரலாற்றில் இது ஒரு முக்கிய மைல்கல்லாகும். முந்தைய ஆண்டுகளின் சராசரி வளர்ச்சியை விட இந்த ஆண்டு மட்டும் வருவாய் ரூ.2,100 கோடி அதிகரித்துள்ளது. பார்சல் மற்றும் சரக்கு போக்குவரத்து சேவைகள் 70 விழுக்காடு வளர்ச்சி கண்டுள்ளதே இதற்கு முதன்மைக் காரணமாகும்.
அஞ்சல் துறையை முழுமையாக டிஜிட்டல் மயமாக்க 'ஐடி 2.0' திட்டத்தின் கீழ் ரூ.5,800 கோடி முதலீடு செய்யப்படவுள்ளது. இதன் மூலம் சேவைகள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு வெளிப்படைத்தன்மை உறுதி செய்யப்படும். செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் கீழ் 3.8 கோடி பெண் குழந்தைகள் இதுவரை சேர்க்கப்பட்டுள்ளனர்.
நகர்ப்புற அஞ்சலகங்களை நவீனமயமாக்க தலா ரூ.60 முதல் 70 லட்சம் வரை முதலீடு செய்யப்படுகிறது. பல்கலைக்கழகங்களில் டிஜிட்டல் வசதிகளுடன் கூடிய அடுத்த தலைமுறை அஞ்சலகங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. அஞ்சல் துறையை நுகர்வோர் மையமாக மாற்றுவதற்கும், கிராமப்புறங்களில் அனைத்து வீடுகளுக்கும் அஞ்சல் நிதிச் சேவைகளைக் கொண்டு சேர்ப்பதற்கும் முன்னுரிமை அளிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2265101®=3&lang= 1
***
TV/PD/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2265236)
வருகையாளர் எண்ணிக்கை : 8