தேர்தல் ஆணையம்
azadi ka amrit mahotsav

இடர் மேலாண்மை மற்றும் தேர்தல் மீள்திறன் குறித்த இந்தியத் தேர்தல் ஆணையத்தின் 5 நாள் பயிலரங்கம் தொடங்கியது

இடுகை இடப்பட்ட நாள்: 25 MAY 2026 6:56PM by PIB Chennai

இந்தியத் தேர்தல் ஆணையம், இந்தியாவின் தலைமைத்துவத் திட்டம் 2026-இன் கீழ் ஜனநாயகம் மற்றும் தேர்தல் உதவிக்கான சர்வதேச நிறுவனத்துடன் (IDEA) இணைந்து, புது தில்லியில் 2026 மே 25 முதல் 29 வரைஇடர் மேலாண்மை மற்றும் தேர்தல் மீள்திறன்குறித்த ஐந்து நாள் பயிலரங்கை ஏற்பாடு செய்துள்ளது. தலைமைத் தேர்தல் ஆணையர் திரு ஞானேஷ் குமார், தேர்தல் ஆணையர்கள் டாக்டர் சுக்பீர் சிங் சந்து மற்றும் டாக்டர் விவேக் ஜோஷி ஆகியோர் தொடக்க அமர்வில் உரையாற்றினர்.

12 நாடுகளைச் சேர்ந்த தேர்தல் ஆணையர்கள் மற்றும் தேர்தல் மேலாண்மை அமைப்புகளின் (EMBs) மூத்த அதிகாரிகள், தேர்தல் மேலாளர்கள், இடர் மேலாண்மை மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள், நெருக்கடி மேலாண்மை மற்றும் தேர்தல் நேர்மை முயற்சிகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் உள்ளிட்ட 32 பேர் இந்தப் பயிலரங்கில் கலந்துகொள்கின்றனர்.

தேர்தல் செயல்முறைகளில் நிறுவன ரீதியான தயார்நிலையையும் மீள்திறனையும் வலுப்படுத்துவதையும், கட்டமைக்கப்பட்ட தேர்தல் இடர் மேலாண்மைக் கட்டமைப்புகள், கொள்கைகள் மற்றும் செயல்பாட்டு அமைப்புகளை உருவாக்கி நிறுவனமயமாக்குவதில் தேர்தல் மேலாண்மை அமைப்புகளுக்கு ஆதரவளிப்பதையும் இந்தப் பயிலரங்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2265084&reg=3&lang=1  

***

TV/RB/RJ 


(வெளியீட்டு அடையாள எண்: 2265223) வருகையாளர் எண்ணிக்கை : 8
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी