திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

2026 தைபே கேப்பிடல் கோப்பைக்கான உலகத் திறன் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியை மத்திய அமைச்சர் திரு ஜெயந்த் சௌத்ரி வழியனுப்பினார்

இடுகை இடப்பட்ட நாள்: 25 MAY 2026 4:58PM by PIB Chennai

தைவானின் தைபேயில் 2026 மே 26 முதல் 28 வரை நடைபெறும் தைபே கேப்பிடல் கோப்பைக்கான உலகத் திறன் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியை மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவுத் துறை இணையமைச்சர் திரு ஜெயந்த் சௌத்ரி வழியனுப்பினார்.

நடப்பாண்டில் ஷாங்காயில் நடைபெறவுள்ள உலகத் திறன்கள் போட்டிக்கு முன்னதாக பயிற்சிப் போட்டியாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இதில், 15 நாடுகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்கின்றனர். இந்தியாவின் சார்பில் 5 பேர் கொண்ட குழு பங்கேற்கிறது.

போட்டியாளர்களிடம் பேசிய திரு ஜெயந்த் சௌத்ரி, உலகளாவிய சிறந்த நடைமுறைகள் மற்றும் சர்வதேச போட்டித் தரநிலைகளிலிருந்து கற்றுக்கொள்வதற்கான வாய்ப்பை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்வதோடு, நம்பிக்கையுடனும், ஒழுக்கத்துடனும், சிறப்பாக இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்துமாறு அவர்களை ஊக்குவித்தார். திறன் போட்டிகளின் முக்கியத்துவத்தை அவர் சுட்டிக்காட்டியதோடு, இத்தகைய போட்டிகள் தொழில்நுட்பத் திறன்களை மெருகேற்றுவது மட்டுமின்றி, இந்தியாவின் திறன் மேம்பாட்டுச் சூழலமைப்பை வலுப்படுத்துவதோடு, வளர்ந்து வரும் உலகளாவிய வாய்ப்புகளுக்கு நாட்டின் இளைஞர்களைத் தயார்படுத்தவும் உதவுகின்றன என்று குறிப்பிட்டார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2264991&reg=3&lang=1

***

SS/IR/LDN/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2265082) வருகையாளர் எண்ணிக்கை : 11
இந்த வெளியீட்டை படிக்க: Telugu , Malayalam , English , Urdu , हिन्दी