புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம்
அகில இந்தியத் தொழில்துறை உற்பத்தி குறியீட்டின் அடிப்படை ஆண்டைத் திருத்துவது குறித்த தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் அறிக்கை
இடுகை இடப்பட்ட நாள்:
25 MAY 2026 4:00PM by PIB Chennai
அகில இந்தியத் தொழில்துறை உற்பத்தி குறியீட்டின் அடிப்படை ஆண்டைத் திருத்துவது குறித்த தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் அறிக்கையை மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
அடிப்படை ஆண்டு திருத்த செயல்முறைக்கு வழிகாட்டும் வகையில், அகில இந்தியத் தொழில்துறை உற்பத்தி குறியீட்டின் அடிப்படை ஆண்டு திருத்தத்திற்காக ஒரு தொழில்நுட்ப ஆலோசனைக் குழு 2024 செப்டம்பரில் அமைக்கப்பட்டது.
கோழிக்கோட்டில் உள்ள இந்திய மேலாண்மைக் கழகத்தின் பேராசிரியரான டாக்டர் மிருதுல் கே சாகர் தலைமையில் அமைக்கப்பட்ட இக்குழுவில், உயர் கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த நிபுணர்கள், முதன்மைப் பொருளாதார நிபுணர்கள், மத்திய அரசின் உயரதிகாரிகள், மாநில பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் இயக்குநரகங்களைச் சேர்ந்த அதிகாரிகள் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
இக்குழு பதினொரு கூட்டங்களை நடத்தியது. இக்கூட்டங்களின் போது, தொழில்துறை உற்பத்திக் குறியீட்டின் அடிப்படை ஆண்டு திருத்தம் தொடர்பான பல்வேறு அம்சங்கள் குறித்து இக்குழு விரிவான கலந்தாய்வுகளை மேற்கொண்டது. குறிப்பாக, இக்குறியீட்டின் நம்பகத்தன்மை, துல்லியம் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான வழிமுறைச் சீர்திருத்தங்கள் மீது இக்குழு சிறப்புக் கவனம் செலுத்தியது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2264966®=3&lang=1
***
SS/IR/LDN/PD
(வெளியீட்டு அடையாள எண்: 2265046)
வருகையாளர் எண்ணிக்கை : 11